Tuesday, March 10, 2026

போகாத் துயரம் போம்...Pray just Godliness

ஒரு தொலைக் காட்சி பேட்டி.
Dr APJ udan.
பேட்டி கண்டவரின் கேள்வி,
' மறு பிறவி உண்டா?'.
Dr க்கு அந்த நேரத்தில் தோன்றிய பதிலாக இருந்திருக்க வேண்டும்,
" தெரியாது ".
பகவத் கீதையில் ஆழ்ந்த ஞானம் உள்ள அவருக்குத் தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை.
புனரபி ஜனனம் 
புனரபி மரணம்.
அண்மையில் சுனந்தாஜியின் 
13th chapter discourse Music Academy இல் 
கடைசி நாள் சென்றிருந்தேன்.
Her first statement.
The Man is destined to attain Godhood.
May be I'm not verbatim.
அது எழுதப் படாத விதி.
நல்லது செய்தாலும் அதன் பலனை அனுபவிக்க மீண்டும் மீண்டும் பிறந்தாக வேண்டும்.
பாவ வினைகளைத் தீர்ப்பதற்கும் மீண்டும் மீண்டும் ஜனனம் எடுக்க வேண்டும்.
அதனால் தான் இம்மையும், மறுமையும்,
இம்மை - மறுமை சுழற்சியும் இல்லாத 
இறை நிலை ஒன்றே யான் வேண்டுவதாக நமது சமயத்தில்
துதிப் பாடல்கள் ஏராளம் ஏராளம்.

இறைவனே! என்னைக் காப்பாற்று!

புனரபி ஜனனம் புனரபி மரணம்
புனரபி ஜனனி ஜட2ரே ச’யனம் |
இஹ ஸம்ஸாரே ப3ஹு து3ஸ்தாரே
க்ருபயாsபாரே பாஹி முராரே ||

மறுபடியும் பிறப்பு; மறுபடியும் இறப்பு; என்று மாறி மாறி வருகின்றன. மீண்டும் மீண்டும் ஒரு தாயின் வயிற்றில் வாசம் செய்ய வேண்டிவருகிறது. இப்படி முடிவே இல்லாத பிறப்பு, இறப்பு என்னும் சுழலில் சிக்கி உள்ளேன். கரை காணமுடியாத இந்த உலக வாழ்விலிருந்து கருணையுடன் நீ தான் என்னைக் கரை சேர்க்க வேண்டும்.

- ஆதி சங்கரர் பஜ கோவிந்தம்.

மற்றுமோர் பாடல் விவேக சிந்தாமணியில் இருந்து:

அல்லல் போம் வல்வினை போம் அன்னைவயிற்றில் பிறந்த
தொல்லை போம் போகாத் துயரம் போம் - நல்ல
குணமதிகமாம் அருணைக் கோபுரத்துள் வீற்றிருக்கும் செல்வக்
கணபதியைக் கைதொழுதக் கால்.

வானுயர்ந்த திருவண்ணாமலை ராஜ கோபுரத்து உள் நுழைகையில் இடது புறத்தில் தூணில் அமைந்திருக்கிற மஹா கணபதியை துதித்துப் பாடியது.

A perplexity English version with minimum tweaking:

A TV interview with Dr. APJ Abdul Kalam. In the interview, the question from the viewer who interviewed , "Is there rebirth?" The response that must have instinctively come to Dr. at that moment was, "I don't know." For someone with profound wisdom from the Bhagavad Gita, it is impossible that he didn't know.Rebirth,
Death and rebirth.Recently, I attended Sunandaji's 13th chapter discourse at the Music Academy on the last day.
Her first statement:
"The man is destined to attain Godhood."
(Maybe not verbatim.)That is an unwritten law.
Even if one does good deeds, one must be reborn again and again to experience their fruits.
To resolve sins and actions, one must take birth again and again.
That is why in our religion, there are countless hymns praising:
This life and the next life, the cycle of this life and the next—
Only the divine state beyond them is what we seek.O Lord! Save me!Rebirth, re-death,
Rebirth in the womb, inert body—
In this samsara full of endless suffering,
Out of compassion, protect me, O Slayer of Mura!From Adi Shankaracharya's Bhaja Govindam.Another song from Viveka Chintamani:Let sorrows go, let painful karma go, let the torment of birth in the mother's womb go,
Let unending grief go—virtuous one,
I bow my hands to the wealthy Ganesha
Who resides in the Aruna tower with abundant good qualities.This praises the Maha Ganapati, located on a pillar on the left side upon entering the towering Tiruvannamalai Raja Gopuram.

No comments:

Post a Comment