Sunday, June 28, 2026

பற்றற்ற நிலை - Is there a point that you should remain sans God?

"அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்’ எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
‘அனுபவம் என்பதே நான்தான்’ என்றான்!"

–கவியரசர் கண்ணதாசன்

அனுபவமே நான் தான் என அனுபவத்திலேயே திளைத்திருந்தால் - மஹா ஸ்வாமி இந்நிலையை சித் ஸ்வரூப நிலை என்கிறார். அந்நிலையில் யாதுமிலா - யாதொரு பற்றும் - இறை சிந்தனை உட்பட - இல்லாத, விவரிக்க முடியாத ஏகாந்த நிலை, உணர்வு.
It is not to deny or negate God consciousness. There's a vast difference. It's like the ripe fruit 🍓 no longer having the craving to cling to the tree.

Every sincere yoga practitioner or the one who sits in dhyan has that experience. You feel it when you do savasan - the corpse posture. Bhagavan did enact this corpse state and from here He questioned, if He was a body, mind or intellect. Only thing, we don't stay in that chidswarup state, i.e., transcendental state continuously. We go into doing our routine daily to-dos. But, the grace is you find a novelty, a sense of aesthetic in carrying yourself, performing so distinct from any humdrum.

Thursday, June 18, 2026

கடவுளிடம் வரம் வேண்டனுமா? Should you pray 🙏 for boons?

வாரம் தோறும் தினமலர் வெள்ளியன்று ஆன்மீக மலர் இணைப்பாக வழங்குவது சிறப்பு.

நான் முக்கியமாக மூன்று விஷயங்களைப் படித்து விடுவேன்.

The three comprises:
Sri Swaminathan 's narration of an instance from Maha Swami's Life,
Second the answers of Swaminatha Sivachariar on the back of the front cover 
And 3rd,
பச்சைப் புடவைக்காரி by Varalotti Rangaswamy.

In today's edition, what struck me was his penultimate para before he wound up the Topic for this toda's edition, the excerpt is here:

The Goddess in human Avatar asks him what he wants.

His reply,

"இனிமேல் உங்களிடம் எதையும் கேட்காத மனம் வேண்டும். தாயே துன்பம், வலி, நோய், வேதனை, மரணம் என நீங்கள் எதைக் கொடுத்தாலும் அதை உங்கள் பிரசாதமாக ஏற்கும் பக்குவம் வேண்டும் தாயே.'

True.
Does God not know what a bhaktha needs and what the God should grant?

This took me a few days back. I messaged to a Sister, "climbing up to have Balaji's Darshan. And I will pray 🙏 for All."

Her immediate reply back was, 
"In front of Balaji, you will, completely full of having the dharshan.,may not remember your wish of Praying."

How true she was!

Yet knowing well it's All God's wish, will, we do express our prayer 🙏 to the Almighty completely ignorant that God knows what He would grant.

Being human, the other day, though not before and in the Sanctum of Balaji, I was there inside the precincts of the temple well over an hour and half for Kalyan Utsav, which my daughter booked. Half an hour before Utsav started, I started meditating. And in the fag end even while in dhyan, I prayed for the good of as many as I could recollect.The list includes immediate family, friends, relatives and finally for the loka kshema.

In the same Topic, elsewhere the Author, Sri Varalotti Rangaswamy writes, "...கேட்டதைக் கொடுக்காமல் வேண்டியதைக் கொடுத்துக் காப்பாற்றும் உங்கள் தாயன்பைப் புரிந்து கொண்டேன்."

Yes,
We may have endless desire.
But Uperwala knows what's best for us.

Monday, June 15, 2026

In the Grip, ...Bhagavan's....பகவானின் அருட் பார்வை

முதல் முறை.
30 வருடங்களுக்கு முன்பு.
திருவண்ணாமலைக்கு பணி நிமித்தம் சென்றது மட்டுமல்ல. பகவானைப் பற்றி கேள்வியுற்றதும்... Mean just hearing about His Name, nothing more.

இப்பொழுது போல் கால் வைக்க இடம் இல்லாமல் இல்லை. ஞானப் பிழம்பான 
அருணாசலேஸ்வரர் என்கிற அண்ணாமலையார் முன் ஆற அமர்ந்து தியானிக்கலாம். No ஜருகண்டி...

பிரமாண்ட ஆலயம் நுழையும் முன்னே. வானுயர்ந்த கோபுரம். நடுவில் சிவ சிவ என்ற வாசகம். நிமிர்ந்து பார்த்து ஒரு நிமிடம் தனை - தேஹம், மனது, புத்தி தான் நான் என்பது மறந்து இறையிலே கரையும் அனுபவம், மஹா ஸ்வாமி ஏன் ராஜ கோபுரங்கள் வேண்டும் என்று தெய்வத்தின் குரலில் எடுத்துரைத்தது நினைவில் மின்னல் ஆடிற்று. ஒவ்வொரு முறை கோபுர தரிசனம் செய்யும் க்ஷனம் சித்த சித்தியாகும் தருணம் என்பார்.

ஆலய தரிசனம் ஆயிற்று.

கால்கள் ஆஸ்ரமம் நோக்கி.

மிக அமைதி. மஹா விஸ்தாரமாக.

மாத்ரு புதேஸ்வர் ஆலயம் - அன்னை அழகம்மாள் அமரரான பின் , அவர் நினைவாக, உள்ளே நுழைகிறோம். ஈஸ்வரர் சந்நிதி. ஆஸ்ரமம் நுழைந்ததிலிருந்து, ஏதோ ஒன்று - நாம் நம் வசமில்லை - ஆட்கொண்டது போல், விவரிக்க இயலாத உணர்வு. Felt completely light, as if like a feather. ஆலயம் உள் வந்ததும், வலது புறம் பகவானின் மார்பளவு சிலா ரூபம். சற்று முன் நோக்கி நகர்ந்தால் உள் ஆலயத்தின் வெளிச் சுற்று கற் சுவரில் பகவானின் sudden fear of death and how He came over it once and for all in முழுக்க முழுக்க ஆங்கிலத்தில். அவ்வளவு பெரிய ஆங்கிலப் பதிவுகளை முன் படித்த அனுபவங்கள் மிகவும் சொற்பமே. இருப்பினும் பொறுமையாக முழுவதும் படித்து முடிந்த பின் தான் மாத்ரு புதேஸ்வர் சன்னதிக்குள் சென்றோம். படித்து விட்டோம் என்றாலும், முழுமையாக கிரகிக்க it took lot of repeated readings and time.

நாம் சென்ற காலம் 90 களின் தொடக்கத்தில். பகவான் சித்தியானது 1950 இல்.

மீண்டும் பகவான் படத்தில் உள்ள வாசகங்கள்:

பகவான் தேக நிலை கடந்து கால காலங்கள் ஆனாலும், He will take care of All Souls, the moment one puts his First Foot in the Asram.

Ohm Namo Bhagavate Ramanaya!

Tuesday, June 9, 2026

எல்லாம் அவன் செயல்

இறைவனே எங்கு இருக்கிறாய்?
இருக்கிறாயா?
தினம், தினம் ஆலயம்
தொழுபவருக்கும்
இக்கட்டான தருணங்களில்
இவ்வினாக்கள் தோன்றுவது உண்டு.
கடவுளைக் கண்டவர் 
விண்டதில்லைதான்.
ஆனாலும் இறைவன்
இல்லாமல் இல்லை.
பின்,
கடவுளைக் காண்பது,
Sorry, Sorry,
உணர்வது எளிதா?
ஏன் இல்லை?!
தியானியுங்கள்.
கடவுளில் திளைப்பீர்கள்.
An Ecstasy 
Bhagavan Ramakrishna Paramahans,
Bhagavan Ramana Maharshi 
Felt.
Such a Wonder words 
Can't describe.

இறைவன் தத்ரூபமாக பிரசன்னமாவாரா?
ஒரு பிரபல திரைப் பிரமுகருக்கு அஞ்சலை புத்திரர் ஆஞ்சநேய சுவாமிக்கு ஆலயம் எழுப்ப தோன்றிற்று. அவர் இல்லம் அருகிலேயே பொருத்தமான் இடம் இருந்தது. ஆனால் அந்த இடம் பக்கத்து வீட்டுக்காரருக்கு சொந்தமானது. அன்பரும், "ஐயா இந்த இடம் விலைக்குத்குத் தருவீர்களா, பகவான் ஹனுமனுக்கு ஆலயம் நிர்மாணிக்க உகந்த இடம்"", என்று கேட்டார்.

பக்கத்து வீட்டுக்காரர் ஒத்துக் கொள்ளவில்லை. மாறாக அன்பரிடம், " உன் இடத்தை தா, நான் வாங்கிக் கொள்கிறேன்" என்றாராம்.

வெகு சில நாட்களே ஆகின.
அன்பருக்கு ஒரே ஆச்சர்யம். தன் இடத்தை தரமாட்டேன், மாறாக உன் இடத்தை வாங்கிக் கொள்கிறேன் என்ற பக்கத்து வீட்டுக்காரர், திடீரென்று வந்து, "அன்பரே என் இடத்தைத் தர தயாராக இருக்கிறேன். தாராளமாக வாங்கிக் கொள்ளுங்கள் ", என்றாராம்.

எல்லாம் அவன் செயல்.

தொக்கிக் கொண்டே கேள்விகள் வராதா?
மஹா சக்தியுடையவன் கடவுள் என்றால், உலகில் ஏன் இவ்வளவு கஷ்டங்கள், போராட்டங்கள்.

புதிர் அனைத்திற்கும், விடைகள் அவனிடத்தில். நாம் செய்வதெல்லாம் நல்லவை ஒன்றே.

வாழ்க வளமுடன்.