Thursday, March 5, 2026

போகப் போக புரியும்....it takes time...

பிரபலமான ரஜினி திரைப்பட வசனம்,
கிடைக்கிறது கிடைக்காம இருக்காது தடுப்பதற்கு எவ்வளவு முயன்றாலும்.
Inspiration, the trigger to above dialogue is Bhagavan's message.

வாழ்வில் எல்லாம் காரண, காரியங்களின் தொடர்ச்சியே என்பது எழுதப்படாத நியதி. கெட்டவன் எல்லாம் கெட்ட ஆட்டம் போட்டு ஜம் ஜம் என்று இருக்கிறானே எனலாம். உண்மைதான். காலங்கள் சுழன்று கொண்டே இருக்கிறது. கெட்டவன் இன்று, இந்த ஜன்மத்தில் ஜம் ஜம் என்று இருக்கலாம். வினைகளை எல்லாம் அறுவடை செய்கின்ற ஜன்மமும் வரும்.

எல்லாம் பிராரப்த படி நடக்கும், சும்மா இரு என்றால் நாம் ஒன்றுமே செய்ய வேண்டாமா? பகவான் கூறுவது செயலற்று இரு என்கிற பொருளில் அல்ல. பகவத் தியானத்திலேயே திளைத்திரு என்பதாகவே.

மஹா ஸ்வாமி சாஸ்திரங்கள் வழி நடப்பதே நல் வாழ்வு என்கிறார். சரி சாஸ்திரம் எது, எப்படித் தெரிந்து கொள்வது. அதற்கும் விடை சொல்கிறார். திருக்குறள் சிறந்த மறை நூல். நித்திய கன்ம நெறி என்கிற தர்மபுர ஆதீன வெளியீடு ஒன்றையும் மற்றுமோர் சாஸ்திரிகளின் சிறிய அளவிலேயே, 30-35 பக்கங்களே கொண்ட தர்ம சாஸ்திர நூல் ஒன்றையும் குறிப்பிடுகிறார். அந்த புத்தகம் எங்கே கிடைக்கும் என்பதையும் குறிப்பிடுகிறார். மாம்பலம் station சாலையில் உள்ள பவானி புக் சென்டரில்.ஸதா சாரம் by Shrivasta Somadeva, Bavani Book centre, 19 Station Road, Chennai - 600033.

இந்த புத்தகத்தைப் புரட்டியதும் முதல் வாக்கியமே அதிகாலை எழுந்ததும் முதலில் செய்ய வேண்டியது தியானம் எனச் சொல்லி இருக்கிறது. ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். அன்றைய நாள், நாளில் செய்கின்றபணிகள் எவ்வளவு சிறப்பாக அமையும் என்று.

மஹான்கள் ஏதோ போகிற போக்கில் எதையும் சொல்லி விட்டு செல்வதில்லை. எல்லாம் எடுத்த மாத்திரத்தில் மிரட்சியாய் 
தோன்றும். ஆழ்ந்த பொருள் போகப் போக புரிபடும்.

By all good means do good.
Be happy.

No comments:

Post a Comment