Friday, August 21, 2026

ஆற அமர....relaax...

https://youtu.be/vOHsMLPpQR0?si=aYR6NQzF49ztvMNd&sfnsn=wiwspwa
ஒவ்வொரு தைப் பூசம் தோறும் கிட்டத்தட்ட 30 கிலோ மீட்டர் பாத யாத்திரையாக அதிகாலை துவங்கி, சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு குன்றக்குடி அடைந்து, சண்முகநாதரை மலை ஏறி தரிசித்து, நகரத்தார் அன்ன தானக் கூடத்தில் இரவு உணவு உண்டதும் களைப்பையும் மீறி மீண்டும் பேருந்து ஏறி ஊருக்குத் திரும்பி விட்டு, மறு நாள் பூசத்திற்கு வரலாமா, காவடிகள் ஆட்டங்களை தரிசிக்கலாமா என்று மனது கேட்கும்.

ஏன் ஊருக்கு ?
வசதியினைக் கருதி, குறிப்பாக கழிவறைகள், குளியல் அறை வசதி வேண்டி.

உடன் பிறவாச் சகோதரன் சொல்வான், ஸ்தலத்திலே ஒரு இரவாவது தங்க வேண்டும் என்று.

உண்மை.

வசதிகள் பொருட்படுத்தாது பக்குவ நிலைக்கு மனதும், உடலும் சில சந்தர்ப்பங்களிலாவது அமைய வேண்டாமா? எல்லாமே அரக்கப் பறக்கவென்றே இருக்க வேண்டுமா?

சகோதரனிடத்தில் சரியென்பேன்.

இரண்டு மூன்று வருடங்கள்.

அதிகாலை கற்பக விநாயகர், பிள்ளையார் பட்டி கோ பூஜை தரிசன பாக்யம் கிட்டிற்று.

மன்னர்கள் காலம் குடியாட்சி என்றாலும் அவர்கள் தர்ம சாஸ்திர நெறிகளின் படி அமைத்த எண்ணற்ற ஆலயங்கள். அனைத்தும் பிரமாண்டம்.

அமைதியாக ஆலயம் செல்வோம்.
இறை அருள் பெறுவோம்.

Never be in a hurry; do everything quietly and in a calm spirit." — Saint Francis de Sales


Tailpiece:

I just checked what the word metaphysical means. Here are the dictionary meanings:

adjective

adjective
meta·phys·i·cal ˌme-tə-ˈfi-zi-kəl 
Synonyms of metaphysical
1
: of or relating to metaphysics
metaphysical truth
metaphysical speculation
2
a
: of or relating to the transcendent (see transcendent sense 1) or to a reality beyond what is perceptible to the senses
… fleeing from experience to a metaphysical realm …
—John Dewey
b
: supernatural
… fate and metaphysical aid doth seem to have thee crown'd …
—William Shakespeare
3
: highly abstract or abstruse
also : theoretical
metaphysical reasoning


Ok, you don't have to take literally every single meaning.  See, the word, in this lexicon, has a meaning, like highly abstract or abstruse. By abstract or abstruse what I get is, it means to say 'difficult to comprehend', not so easy.  But the beauty beneath is they are not, in fact theoretical. Certain things you can't see with your eyes like a spectacle. Yet you can experience, feel.  Example: Air.

The same way, in a divine atmosphere like being in the temple....you will get a dimension, which may not be visible to the eyes, yet it's perceptible...only thing we can't elucidate it in words....
"ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே!கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டு உணர்வார் தம் கருத்தின்நோக்கு அரிய நோக்கே! நுணுக்கு அரிய நுண் உணர்வே!போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே!காக்கும் எம் காவலனே! காண்பு அரிய பேர் ஒளியே!"


Friday, August 14, 2026

கணக்காய் இருக்கணும்...கணக்குப் பார்க்கப்படாது...

நன்றி.

For the நல்ல உள்ளம் who shared this Poignant Picture.

இதைப் பார்த்ததும் நினைவில் தோன்றியது:

நம் இல்லங்களில் எல்லாம் ஒரு சம்பாஷனை நிகழ்வதுண்டு.

தினசரி காய்கறி விற்கும் மூதாட்டியிடம் கீரை வாங்க அப்பத்தா பேரம் செய்வார்களாம்.

அதே அப்பத்தா வியாபாரம் முடிந்ததும் மூதாட்டிக்கு மூன்று இட்லிகளும், காஃபியும் கொடுப்பார்களாம்.

வியப்பு மேலிட்ட பேத்தி கேட்பாளாம்,
"ஏன் அப்பத்தா, கீரை வாங்க பேரம் பேசுற, இட்லியும், காஃபியும் தாராளமாகத் தருகிறாயே?" என்று.

அப்பத்தாவின் பதில்:

"செல்லமே, வியாபாரத்துல கணக்கா இருக்கணும். தர்மத்துல கணக்குப் பார்க்கக் கூடாது".

இப்படிச் சொல்கிற அப்பத்தாக்களும் பாத்திரம் அறிந்தும், அளவாகவும் செயல்படுகிறவர்களே.

அய்யாக்கள் கடல் கடந்து வாணிகம் செய்தாலும் சிக்கனமாய் சேமித்து பெருங்குடும்பம், கூட்டுக் குடும்பம் என தீர்க்கமாய்ச் சிந்தித்து அப்பத்தாக்கள் கட்டியவையே கோட்டை போன்ற நம் இல்லங்கள்.

அப்பத்தாக்களின் தீர்க்கமும், கூட்டுக் குடும்பங்களும் மீண்டும் வேண்டும் என்பது நியாயமான ஆசைதானே?!


Saturday, August 8, 2026

GOD PHENOMENON...இறைமை

 



The irony or beauty,

As you may call it

GOD or

No God.

The One saying

No God

Does not just fool himself,

But he knows not

That he tries

Fooling others

As well.

Either consciously

Or Not.

Well,

What about the one

Saying God?!

Does he 

Enlighten any one?

The answer seems

Elusive.

For, enlightenment is

A strange phenomenon

That it Crashes down 

Like an avalanche.


இறைமை விவாதம்
உளதென்றும் இலதென்றும் இறைவன் தன்னை
உரைக்கின்ற வாதங்கள் அழகு விந்தை!
இலதென்று சொல்பவனோ தன்னை ஏய்த்து
இகழறியா மாந்தரையும் ஏய்க்கின் றானே!
உளதென்று சொல்பவனால் ஞானம் உண்டோ?
உண்மையிது நழுவுகின்ற விடையாய் ஆகும்!
மறைபொருளாய் நழுவும்விடை;
மாமழை போல்வந்து
நிறைவதே ஞானத்து விந்தை!

wrapping up quote:


“the First Insight is an awareness of the mysterious occurrences that change one’s life, the feeling that some other process is operating.”

James Redfield, The Celestine Prophecy


Tamil version courtesy:  AI

Wednesday, August 5, 2026

Holy guts...no graveyard for dead animals ... புலால் அன்றி

"கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பிஎல்லா உயிரும் தொழும்" ---(குறள்: 260)

சகல ஜீவராசிகளையும்
அவற்றின் வலியையும்
உணர்ந்த 
சனாதனம் அன்றி
வேறொன்று உண்டோ?

பிறவொன்று அன்று
அனைத்தும் ஒன்றே
ஆக 
தன்மயம் காணும் 
- Realising Self,
மகத்தான 
அன்னை பூமி
பாரதத்திற்கன்றி 
சனாதனத்திற்கன்றி
பிறவொன்று
காணுவது எங்கே?!

தாய் மண்ணே வணக்கம்.

"Who slays no life and shuns the flesh as food,Is praised by all, in holy brotherhood."— (Thirukkural: 260)

Is there a path, 
save Sanatana's grace,
That feels the pain of 
every breathing race?
No life stands apart, 
for all souls are one,
Woven as light from
the selfsame sun.
Where else blooms
the Truth of the Self
so grand,
If not in this faith,
and our Motherland?
To Bharath, 
Great Mother, 
I bow and stand.

Tuesday, August 4, 2026

No Mind, No Thought...just சொல் அற

What is Yoga?
The State of 
No mind,
No thought.
Just indescribable 
Ecstatic 
Transcendence.
Full of Bliss -
சித் ஸ்வரூப மயம். 

அருணகிரிநாதரின்
சும்மா இரு 
சொல் அற நிலை.

Any other way
You can experience such
Transcendence?
The asana - yoga
Practice is helpful.
Esp., the saavaasn -
Corpse state.

Yes, yoga practice
Facilitates dhyan.
Try.
Derive the nectar 
The Bliss - ஆனந்த.
Words too poor 
To explain.

யோகம் எனப்படுவது யாது?
மனமற்ற பெரும்வெளி,
மறைந்தே போன எண்ணங்கள்!வார்த்தைகள் தொட 
இயலாபரவசத் 
தனிப் பெருநிலை!
பேரானந்தப் பெருவடிவம் 
—சித் ஸ்வரூப மயம்!
அருணகிரிநாதர் அருளிய
"சும்மா இருசொல் அற" நிலை!
இத்தகைய பேரானந்தப் 
பெருநிலையை
எய்திட வேறு வழியுண்டோ?
உதவிடும் யோகப் பயிற்சி,
விசேஷமாய், 
உடலொடுங்கும்
"சவாசன" நிலை!
ஆம், 
யோகப் பயிற்சி
தியானத்தைக் கூட்டுவிக்கும்;
முயன்று பார்!
சுவைத்திடு அந்த 
ஆனந்த அமுதத்தை!
விளக்கிட வார்த்தைகளோ
மிகவும் ஏழை!


தமிழ் courtesy: AI