- Psalm 46:10. In the King James Version:
நம் அருணகிரிநாதர் கந்தர் அனுபூதி பாடல் 12 இல் சொன்னது தான்,
" சும்மா இரு, சொல் அற" என்று.
இரண்டு நாட்களுக்கு முன் ஒரு client அலுவலகத்தில் கணக்கு அதிகாரியாக பணியாற்றும் சகோதரி வந்தார். கணக்கு ஆலோசனையின் ஊடே திடீரென்று ஒரு வினா எழுப்பினார்,
" ஏன் Sir, அது என்ன உங்களுக்கு ரமணரின் மேல் ஒரே obsession, WhatsApp status இல் பெரும்பாலும் மகரிஷியின் message தான், அலுவலகத்திலும் திரும்பிய பக்கங்கள் எல்லாம் ரமண மஹானின் படங்கள்...?".
கணக்கில் மூழ்கியிருந்த நான் இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வது, திகைத்தேன்.
ஒரு முறை ஆஸ்ரம் போய் வாருங்கள், பிறகு சொல்லுங்கள் என்றேன்.
இருபத்து ஐந்து, முப்பது வருடங்களுக்கு முன் முதல் முறையாக திருவண்ணாமலை சென்றது, அது வரையில் ரமணர் குறித்து கேள்வி கூட பட்டிராதது எல்லாம் மீண்டும் நினைவில் நிழலாடின.
Suspended animation என்பார்களே, அதே உணர்வு அமைதியாயிருந்த ஆசிரமத்தில் நுழைந்த உடன். ஆங்கிலம் எல்லாம் சரளமாக வாசிக்கத் தெரியாத ஆரம்ப நிலை. மஹான் தாயாருக்காக அமைத்திருந்த அழகிய ஆலயம் மாத்ரு பூதேஷ்வர் சன்னதிக்குள் முன் மண்டபம். உள் சென்றதும், வலது புறம் மஹானின் மார்பளவு சிலா ரூபம். சற்று நகர்ந்ததும் சன்னதி வெளிச் சுவற்றில் ஒரு நீண்ட திரையில், மரணம், மரண பயம், கடந்த அனுபவங்கள், உண்மை எது, தேஹமா, புத்தியா, ஏதேனும் எல்லாம் கடந்த ஒன்றா என்ற மஹானின் 16 வயதில் மதுரையில் ஏற்பட்ட வினாவின் thorough விவரங்கள். முழுக்க முழுக்க ஆங்கிலத்தில். பொருளொன்றும் உடன் புரிதல்களுக்கு அப்பாற்பட்டதாகத் தோன்றினும், ஏதோ இருக்கிறது படித்து விட வேண்டும் என்று பொறுமையாக முதல் வார்த்தையிலிருந்து கடைசி வரை படித்து விட்டேன். பொருள் மீண்டும் மீண்டும் படிக்க படிக்கத்தான் பிடிபட்டது.
மீண்டும் இந்தப் பதிவில் பகிர்ந்த பகவானின் (முதல் picture message) message இல், line நான்கிற்கு வாருங்கள். What did Bhagavan say, "You are not it."
If not it, what did He mean?
You are not the Mind.
இது அறிந்த பின் அலைகள் அடங்கிய பூரண அமைதி.
அதிகம் பேசாமல் அமைதியாயிருந்தே எது உண்மை என்று நம்மை உணரச் செய்த மஹான் பகவான் ரமணர்.
மற்றொரு நண்பர் ஒரு முறை ஆஸ்ரம் போய் வந்ததும் சொன்னது, " ஏதோ தெரியவில்லை, அங்கு சென்று வந்தது ஏதோ ஒரு அபூர்வ அனுபவம் போலிருந்தது. என்னவென்று சொல்லத் தெரியவில்லை."
