வள்ளலார் சைவ நல்வர்கள் குறித்து பாடியதின் நினைவைப் போற்றும் கருத்தரங்கம். நெறியாளர் பேராசியர் விசாலாக்ஷி அம்மையார் அவர்கள்.
ஒரு கதை ஒன்று சொன்னார்கள்.
ஒரு செல்வ வளம் நிறைந்த ராஜா தினசரி ஏழை, எளியவர்களுக்கு வேண்டியதை வழங்கி வந்தாராம். இருப்பினும் அவருக்கு சரியான தூக்கம் இல்லை.
அந்த ஊருக்கு ஒரு ரிஷி வந்திருந்தார்.
அவரிடம் சென்று தனது தூக்கமின்மையை கவலையுடன் தெரிவித்தார் ராஜா. 'சுவாமி நான் நிம்மதியாக உறங்குவதற்கு வழி சொல்லுங்கள்", என்றார் ராஜா.
ஞானியும் ராஜாவிடம், "உங்கள் செல்வத்தையெல்லாம் என்னிடம் கொடுத்து விடுங்கள். நான் உங்களைக் கவனித்துக் கொள்கிறேன்" என்றார்.
ராஜாவும் பெரிய மஹான் கேட்கிறாரே என்று மறுக்காமல் செல்வம் அனைத்தையும் ஞானியிடம் கொடுத்து விட்டார்.
ஞானியும் ராஜாவின் அன்றாடத் தேவைகளுக்காக சில பொற்காசுகளை தினசரி வழங்கி வந்தார். ராஜாவும் தன்னை நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வதை நிறுத்தவில்லை. ஆனால் தற்பொழுது நன்றாக உறக்கம் வந்தது.
மீண்டும் ஞானியை சந்திக்கிறபோது, "உறக்கம் நன்றாக வருகிறதா, என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்", என்று ஞானி ராஜாவைக் கேட்டார்.
ராஜாவும் நன்றாக உறக்கம் வருகிறது, நான் முன் செய்த உதவிகளைத்தானே இப்பொழுதும் செய்து வருகிறேன், முன் வராத உறக்கம் இப்போது எப்படி வருகிறது என்று ஞானியிடம் வினவினார் .
ஞானி சொன்னார், " நீங்கள் அரண்மனையிலிருந்த போது நான் கொடுக்கிறேன் என்ற உணர்வோடு கொடுத்து வந்தீர்கள்;
இப்பொழுது கொடுக்கும்போது நான் கொடுக்கிறேன் என்ற உணர்வு தங்களை விட்டு அகன்று விட்டது. இது தான் தாங்கள் நன்கு உறங்குவதின் பின்னணி"
No comments:
Post a Comment