முயன்று பாருங்கள்.
முயற்சி பெரிதொன்றும் இல்லை என்பது உணர்வீர்கள்.
அவ்வளவு எளிது.
சரி.
த்யானம் எளிது.
அது அவசியமா?
ஆம்,
அது அவசியம் ஆகாத சாக்ஷத்காரா நிலை கைகூடும் வரை.
ஒரே பரபரப்பு.
வேகம்,
விவேகம் தொலைந்த தாறுமாறு,
பதைபதைப்பு.
உயர் ரத்த அழுத்தம்.
தீர்வெங்கே?
விலை மிகுந்த மருந்துகளிலா ?
மருத்துவர் அடிக்கடி சொல்லும் ஒன்றை நாம் கவனிக்கத் தவறிவிடுவோம். அப்படி என்ன நாம் கூர்ந்து கேட்டுக்கொள்ளாததை அவர் சொல்லியிருக்க கூடும்?.
" இந்த மருந்து சாப்பிடுங்க, இதில் அவ்வளவு side effects இல்லை".
ஆக நாம் காதில் வாங்கிக் கொள்ளாத வார்த்தைகள், side effects. Side effects இல்லை என்றால் அவர் ஏன் rider விட வேண்டும். நிச்சயமாக எல்லா மருந்துகளிலும் side effects உண்டு.
வேறு வழி இல்லையா?
ஏன் இல்லை என்பதே பதில்.
மனது ஆற்றுப்படுவதே, அமைதி நிலை ஆழ்ந்த தியானத்தில்தான்.
த்யானம் விலை ஒன்றும் இல்லை. விலை மதிக்கவொண்ணா ஒன்று. இறைவனின் அற்புதம்.
No comments:
Post a Comment