மகரிஷி அரபிந்தோவின் இந்த செய்தி புரிவது போல் இருக்கும். புரியாதது போன்றும் தோன்றும். ஆழ்ந்த கருத்து ஒன்று பொதிந்திருக்கிறது இந்த நல்ல செய்தியில்.
அனைத்தும் அவன் செயலே, அவன் அருளாலே எனும் பொழுது இங்கே நல்லவர் யார், தீயவர்கள் யார். அவரவர் பரிணாம - evolutionary - வளர்ச்சி அளவே பக்குவப் பட்டிருக்கிறார்கள்.
எல்லோருள்ளும் இறைவன் உறைந்திருக்கிறான் என்றால் இங்கே யார் நல்லவர், நல்லவர் அல்லாதார்?
அன்னை சாரதா தேவியை சந்திக்க அடிக்கடி ஒரு அன்பர் வருவார். ஒரு முறை, தான் முறையற்றவன், அம்மா உங்களைத் தரிசிக்கத் தகுதியற்றவன், இனி தங்களைத் தரிசிக்க வர மாட்டேன் என்று சொல்லி விட்டு விறு விருவென நடையைக் கட்டினார். அன்னை விடவில்லை. ஓடோடி வந்து அன்பரை பிடித்து இழுத்து, ' மகனே, அவ்வாறு எல்லாம் சொல்லாதே. யாரும் தரிசிக்கத் தகுந்தவர், தகுதி இல்லாதவர் என்றெல்லாம் இல்லை. எப்பொழுதெல்லாம் உனக்கு மனக்குழப்பம் நேருகிறதோ, என்னை நினை, நீ தவறேதும் செய்ய மாட்டாய்'.
அன்னையின் செய்தி அன்பரின் மனதில் ஆழமாய் வேரூன்றியது.
நல்லோர் தரிசனம், நல்லதே நடக்கும். நன்மையே பயக்கும்.
सत्सङ्गत्वे निस्सङ्गत्वं
निस्सङ्गत्वे निर्मोहत्वम् ।
निर्मोहत्वे निश्चलतत्त्वं
निश्चलतत्त्वे जीवन्मुक्तिः ॥
Satsaṅgatve nissaṅgatvaṁ
nissaṅgatve nirmohatvam
nirmohatve niścalatattvaṁ
niścalatattve jīvanmuktiḥ
- பஜகோவிந்ததிலிருந்து அற்புத வரிகள்.
ஆன்றோர், நல்லோர் தரிசனம்
மோகத்தினின்று விடுதலை.
மன சஞ்சலமின்மை.
நித்சலனமான மனம் என்றும் இறையுள் - உண்மையில் நிலைத்திருக்கும்.
உண்மையில் நிலைத்திருக்கும் இந்தப் பிறவி நிலையிலேயே முக்தியில் திளைத்திருக்கும்.
No comments:
Post a Comment