Monday, October 19, 2026

எளிய கேள்வி, நான் யார்...Who am I?

இந்த மகான் அருணாசலேஸ்வரரோடு ஐக்கியமாகிய 1950 இல் பெரும்பாலான நாம் பிறந்திருக்கவே மாட்டோம். இவரது ஆசிரமம் ஒன்று இருக்கிறது என்று முதல் முறை தெரிந்து, பகவானின் சந்நிதிக்கு சென்று திரும்பிய யாரும் ஏதோ ஒரு இனம் புரியாத நிலையிலேயே நிச்சயம் வந்திருக்க வேண்டும்.

ஒரு அன்பர் ஆலோசனை நிமித்தம் வந்தார். எங்கள் அலுவலகத்தில் இருந்த மஹானின் படத்தை பார்த்ததும், "சமீபத்தில் தான் ஆசிரமம் சென்று வந்தேன். முதல் முறையாக. என்னவோ தெரியவில்லை, விளக்கமுடியாத பேரணுபவம்" என்றார்.

பகவானின் கேள்வி, "நான் யார்?", "who am I?" எளிதான கேள்வி போல் தோன்றும். ஆழ்ந்த profound செய்தி message உள்ளிருக்கிறது.

நீங்கள் எங்கும் யாரிடமும் தியானம் பழகுங்கள், பயிற்சி செய்யுங்கள். பகவான் உத்வேகப் படுத்துவார், தாராளமாக செய்யுங்கள் என்று. என்முறைக்கு மேல் ஏதும் இல்லை, தன் வழியே சாலச் சிறந்தது என்றெல்லாம் நவீன உலக பிரஸ்தாபங்களுக்கிடையே,
பகவான் அமைதியாய், அழகாய் சொல்வது,

'ஆன்ம விசாரம் ஒன்றே வழி,
Who am I?,
நான் யார்?'

என்று.

You are not anywhere.
You search for what you already are.
Once aware,
You are it.
No needs.
No wants.


No comments:

Post a Comment