என்ன வெயில்?!
தாங்க முடியலை.
அப்பாடா.
வருண பகவான் கண் திறக்க மாட்டானா?
மேற்படி வசனங்கள் நிறைய கேட்டு விட்டோம். சற்றே 5 வருடங்கள் பின் நோக்கிச் செல்வோம். கொரோனா, கொரோனா என்ற கொடியவர்கள் ஏவி விட்ட கொடும் நோய் உலகையே ஆட்டிப் படைத்தது நினைவிருக்கிறதா?. ஆக்சிஜனுக்கு மணிக் கணக்கில் ஆஸ்பத்திரிகளில் எவ்வளவு நீண்ட வரிசைகள்.
வேண்டுவதெல்லாம் ஒன்றே ஒன்று தான். நம் காலத்தில் ஒவ்வொரும் ஒரு மரமாவது நடுங்கள். மரங்கள் உங்கள் சந்ததிகளுக்கு மட்டுமல்ல. ஏனையோர், ஏன் பிற ஜீவ ராசிகளும் கால காலத்திற்கும் பயனளித்துக் கொண்டே இருக்கும்.
சீன நல்ல பழமொழிகளையும் தந்திருக்கிறது,
"The best time to plant a tree was 20 years ago. The second best time is now."
— Chinese Proverb
Khaleel Gibran:
"Trees are poems that the earth writes upon the sky."
— Khalil Gibran
அழகான, ரம்மியமான கவிதைகள் நிறைய மலரட்டும்.
மரம் வளர்த்து மண் வளம், சகல ஜீவ ராசிகளின் நலம் பேணும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் கோடி கோடி நமஸ்காரம்.
No comments:
Post a Comment