லக்ஷ்மி தேவிக்கு நம் இல்லங்களில் எல்லாம் சிறப்பிடம்.
Shunmyo Masuno, Buddhist Monk in his, "Zen, The Art of Simple Living இல் இப்படிச் சொல்கிறார்:
"Disorder in your mind shows in your feet.".
உடன் பிறவாச் சகோதரனுக்கு திருமண நாள் பரிசாக இந்தப் புத்தகத்தை வழங்கினேன். சிறிது நாட்கள் கடந்த பின், பணி நிமித்தம் பெங்களூர் செல்ல வேண்டியிருந்தது. பணி ஓய்வின் போது சகோதரன் அவன் இல்லத்திற்கு அழைத்திருந்தான். சென்றேன். மிகுந்த வியப்பு. அவன் இல்லம் உள் செல்லுமுன் நான் கண்ட காட்சி. பாதணிகள், எங்கள் ஐயா - தாத்தா விளிப்பது பாத ரக்ஷைகள், ஒழுங்கே சீராய் அதற்குரிய பலகைகளில் வைக்கப் பட்டிருந்தன.
நான் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. நல்லன படிப்பது, கேட்பது என்ன என்ன மாற்றங்களை, yes +ve நிகழ்த்தும்.
இதைச் செய்த நான், சிறிது நாட்களுக்கு முன் சிவன் Sir ஆலயத்தில் - நங்கநல்லூர், எனது பாதணிகளை வெளியே அவைகளுக்காக அமைக்கப் பட்டிருந்த பலகைகளை விட்டு சற்று தள்ளி விட்டு விட்டுச் உள்ளே சென்றேன். என்னைப் போன்ற பிறரும் தள்ளியே விட்டுச் சென்றிருந்தனர். தரிசனம், தியானம் நிறைந்து திரும்புகையில் வியக்கும் வண்ணம் நான் கண்ட காட்சி. பாதணிகள் சீராய் பலகைகளில் வைக்கப் பட்டிருந்தன. என்னை நொந்து கொண்டு, சீராய் அமைத்து உதவிய நல்ல உள்ளத்தை, யார் என்று தெரியவில்லை, உளமாற வாழ்த்தினேன்.
மனித உடலின் பாதங்களிலும் லட்சுமி கடாட்சம் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.
No comments:
Post a Comment