Wednesday, March 4, 2026

எல்லாம் அவன் செயல்...All credits to Him.

மேல் எழுந்தவாரியாக
வாழ்க்கையில் விடைகள்
எளிது போலத் தோன்றலாம்.
எல்லாம் மனித முயற்சிகளுக்கு
உள்ளேயே சாத்தியம் என்றும்.
முயற்சிக்கவே கூடாது 
என்பதல்ல நமது வாதம்.
எளிது போன்ற தோற்றமளித்த
விடைகள் பலமுறை
பிரச்சனைகளை அருகிலே
அணுகுகிற போது
பூதாகாரமாய் விஸ்வரூபம் எடுக்கும்.
உதாரணம்:
தனஞ்ஜயன் என்று பெயர் பெற்ற அர்ஜுனன் இருக்கப்பட்டு
கொடுக்க மனமில்லாத ராஜ்யங்களை
வென்று கஷ்டப் படுகின்ற 
ஜனங்களுக்கு வழங்குகிற பொழுது,
யுத்தம் என்பது அர்ஜுனனுக்கு கஷ்டமாகத் தெரியவில்லை.
இந்த யுத்த வித்தகனுக்கு
குருக்ஷேத்ர  யுத்தம் மயக்கத்தை
ஏற்படுத்தியது.
கிருஷ்ணன் சாரதியாக அவதாரம்
எடுத்து குழம்பிய அர்ஜுனனை
தெளிவிக்க வேண்டியது ஆயிற்று.
பல தருணங்களில் நாம் 
என்ன முயற்சித்தும் விடை தெரியாத
பிரச்சனைகள் நாம் வியக்கின்ற 
வகையிலே திடீரென எளிதிலே
நிவர்த்தியாகும்.
எல்லாம் அவன் செயல்.
நாம் செய்ய வேண்டியதெல்லாம்
நமக்குள் இருக்கும் 
மஹா தெய்வீக சக்தியை
தியானிப்பது தான்.
வாழ்க வளமுடன்.

Just asked Perplexity, "Hi, could you get English version of above?". In no second it did. Yet in a few contexts, it seemed to say, "hey human, you can't have it all easy, there should be your contribution also. Hence I leave editing, fine-tuning to you." With due respect and gratitude to Right-honourable Perplexity, here is a little tweaked English version:

At surface level,
life's answers may seem easy.
Everything appears possible through human effort alone.
But our argument isn't that one shouldn't even try. Solutions that look simple
often, when problems draw near,
reveal their true, cosmic form dramatically. Example:
When Arjunan, famed as Dhananjayan,
conquers kingdoms that held all wealth close to their chests and unwilling to share with needy
and grants them to struggling people,
Engaging in war didn't seem difficult to him.
Yet, for this master of warfare,
the Kurukshetra battle caused confusion. Krishna incarnated as charioteer
to clarify for the bewildered Arjuna.
Many times, problems we face—
no matter how we make our efforts, with no apparent solution—
suddenly resolve easily,
in ways that leave us astonished.
It's all His - God's doing.
All we must do
is meditate on the great divine power within us.
Live prosperously.

Tuesday, March 3, 2026

இறைவனா?.........Where is He?


இறைவனா?
யார் அவர்,
எங்கு இருக்கிறார்?
கேட்பவர் கேட்டுக் கொண்டே
இருக்கட்டும்.
பஞ்ச பூதங்களில்
காற்று கண்ணுக்குத்
தெரிவதில்லை -
காற்றே இல்லை என்போமா?
இறைவன் என்றழைக்கப்
பிடிக்கவில்லையா?
எங்கும் நிறைந்து இருக்கும்
ஏகன் அனேகனை 
யாது சொல்லியும்
அழையுங்கள்.
இல்லை என்று சொல்வதற்கும்
உங்களுக்கு இடம் அளித்திருக்கிறான் -
தாராளமாய், வாய் வலிக்க 
சொல்லிக் கொண்டே 
இருங்கள்.
கேழ்வரகிலே நெய் 
வடிகிறது என்று
சொல்வதை கேட்பவர்களும்
கேட்டுக் கொண்டே இருக்கட்டும்.

இறைவன் காணும் பொருளா?
உணரும் மஹா சக்தி அன்றோ!
How long to feel 
The Presence?
Though to say always,
Even a split of second
Realizing would sure
Lead to the constant
Feel of the Presence,
Presence of Godliness,
The Bliss.

May God Bless All.

Monday, March 2, 2026

தன்னை அறியாது யாதும் அறிந்தென்ன பயன்? What use is in knowing all else except... knowing One's True Self?


"The sense of 'I' pertains to the person, the body, and brain. When a man knows his true Self for the first time, something else arises from the depths of his being and takes possession of him. That something is behind the mind; it is infinite, divine, eternal. Some people call it the Kingdom of Heaven, others call it the Soul, and others again Nirvana, and Hindus call it Liberation; you may give it what name you wish. When this happens, a man has not really lost himself; rather, he has found himself.

Unless and until a man embarks on this quest of the true Self, doubt and uncertainty will follow his footsteps through life. The greatest kings and statesmen try to rule others when in their heart of hearts they know that they cannot rule themselves. Yet the greatest power is at the command of the man who has penetrated to his inmost depth.... What is the use of knowing about everything else when you do not yet know who you are? Men avoid this inquiry into the true Self, but what else is there so worthy to be undertaken?"

--Ramana Maharshi and The Path of Self-knowledge

Here is the version in Tamil, thanks to Perplexity:

நான்' என்ற உணர்வு உணரும் நபர், உடல் மற்றும் மூளையைச் சேர்ந்தது. ஒரு மனிதன் தனது உண்மையான ஆத்மாவை முதல் முறையாக அறிந்துகொள்ளும்போது, அவனது இருப்பின் ஆழத்திலிருந்து வேறொரு பொருள் எழுந்து அவனை ஆக்கிரமித்துக்கொள்கிறது. அந்தப் பொருள் மனதின் பின்னால் உள்ளது; அது அளவில்லா, தெய்வீகமானது, நித்தியமானது. சிலர் அதை சுவர்க்க ரா ச்சியம் என்று அழைப்பார்கள், மற்றவர்கள் ஆத்மா என்று, மீண்டும் சிலர் நிர்வாணம் என்று, இந்துக்கள் முக்தி என்று அழைப்பார்கள்; நீங்கள் விரும்பினால் எந்தப் பெயரிடுகையும் கொடுக்கலாம். இது நடக்கும்போது, அந்த மனிதன் உண்மையில் தன்னை இழந்துவிட்டதில்லை; மாறாக, அவன் தன்னையே, தன் உண்மைத் தன்மையையே உணர்ந்து கொண்டான்.ஒரு மனிதன் இந்த உண்மையான ஆத்மத் தேடலில் இறங்காவிட்டால், சந்தேகமும் நிச்சயமின்மையும் அவனது வாழ்க்கையில் அவனது பாதையில் பின்தொடரும். மிகப்பெரிய அரசர்களும் , statesmen கள் எல்லாம் தங்கள் இதயத்தின் ஆழத்தில் தங்களைத்தானே ஆள முடியாது என்பதை அறிந்து கொண்டே, மற்றவர்களை ஆள முயல்கின்றனர். ஆனால் மிகப்பெரிய சக்தி, தனது ஆழ்ந்த உள்ளத்தில் ஊடுருவிய மனிதனின் கட்டுப்பாட்டில் உள்ளது... நீங்கள் யார் என்பதை இன்னும் அறியாதபோது, மற்ற எல்லாவற்றையும் அறிந்துகொள்வதற்கு என்ன பயன்? மனிதர்கள் உண்மையான ஆத்மாவுக்கான இந்த விசாரணையை தவிர்க்கின்றனர், ஆனால் இதைவிட மேலானது என்ன செய்யத்தக்கது உள்ளது?"--ரமண மகரிஷி மற்றும் ஆத்மஞான பாதை

Perplexity யின் மொழி உள்வாங்களில் சிற்சில மாற்றங்களுடன். நன்றி Perplexity.

Ohm நமோ Bhagavate Ramanaya.

Sunday, March 1, 2026

நன்றே செய்க..do good

"தான்பிறர்க் கீவதெலாந் தன்னையே ஈவதெனத்
தான்மருவ வல்லான் றவறாவன் - தான்பிறர்க்கு
ஈவதெலாந் தன்னையே ஈவதெனத் தேர்ந்தக்கால்
ஈயாதிருப்பாரெவ் வார்."

ரமண மஹானின் உபதேசங்களை முருகனார் தொகுத்த குருவாசகக் கோவை 807 வது பாடல்.

பொருள்: இந்த உலகில் நாம் எல்லாம், தாவர ஜந்துக்கள் உட்பட ஒரே மூலத்திலிருந்து தோன்றியவர்கள். இதில் நாம் ஒருவருக்கு நன்மையோ, தீமையோ இழைத்தால், அது நமக்கு நாமே இழைத்துக் கொள்வது போல் ஆகும். ஆகவே, நன்றே செய்க.

தமிழுக்கு, வளர்ச்சிக்கு யாதும் செய்யாது, தமிழை துண்டுச் சீட்டைப் பார்த்தும் படிக்கத் தெரியாது, தாங்கள் தான் தமிழினக் காவலர் என்பவர் எல்லாம் இது போன்ற அருமையான பொருள் பொதிந்த பாடல்களைப் படிக்கட்டும். நிச்சயம் சிரம் தாழ்ந்து வணங்குவோம்.

Song 807 from Guru Vachaka Kovai, compiled by Muruganar from the teachings of Ramana Maharshi.Meaning: In this world, we all— including plants and animals— have emerged from the same source. If we do good or harm to another, it is as if we are doing it to ourselves. Therefore, always do good.Those who do nothing for the welfare or development of Tamil, who cannot even read Tamil when seeing it in print, yet claim to be the guardians of the Tamil race— may they read such profound songs brimming with wisdom like this one. We will surely bow our heads in reverence.

English version courtesy: Perplexity 

Saturday, February 28, 2026

உன்னை விடாமல் பற்றிக்கொள்...go within

God, on being worshipped, bestows steadiness in devotion which leads to surrender. On the devotee surrendering, God shows His mercy by manifesting as the Guru. The Guru, otherwise God, guides the devotee, saying that God is in you and He is the Self. This leads to introversion of the mind and finally to realization.

Sri Ramana Maharshi
"குருவடிவாகி குவலயம் தன்னில்"
ஔவையார் விநாயகப் பெருமானே குருவாக வந்து உபதேசிப்பதாக விநாயகர் அகவலில் பாடியிருக்கிறார். நமக்கெல்லாம். கோவில்களில் பக்தர் கூட்டம் நிரம்பித் தழும்புகிறது. இருந்தும் எங்கோர் மூலையில், கண்டவர் விண்டதில்லை, விண்டவர் கண்டதில்லை முனு முனுப்பது நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஸ்வாமி விவேகானந்தரே பகவான் ராமகிருஷ்ணரிடம் கடவுள் எங்கே கேட்கிற நிலையில் நாம் எல்லாம் எம்மாத்திரம். இது போன்ற தத்தளிக்கும் தருணங்களில் தோன்றுபவர்களே பகவான் ரமண மகரிஷி போன்ற மஹான்கள். 

கடவுளின் சிருஷ்டியில் அடிப்படையான தாத்பரியம் இயல்பிலே மகிழ்வுடன் - happy ஆக இருப்பது தான். பின் எங்கே வந்தது கவலைகள், துயரங்கள். இந்த மாயா உலகிலே ஆசைகள், அதன் பொருட்டு ஓடிக் கொண்டே இருப்பதில், அவா நிறைவுறாத போது துயரங்கள். எந்த உயரத்தை அடைந்தால் மகிழ்ச்சி. ஆசைகளுக்கு அளவே இல்லை. ஒன்று நிறைவேறினால் மற்றொண்டு. ஓய்வு, ஒழிச்சலே இல்லை. பின் எங்கிருந்து தன் இயல்பான சுவாபத்தை மனிதன் உணர்வது.

ஒரு அன்பர் மலை ஏறி வந்து பகவானிடம், "ஸ்வாமி எனக்கு ஏதேனும் உபதேசியுங்கள்", என்றாராம். பகவான், " நான் என்ன சொல்வது?" என்று கூறியதும், அன்பர் முகம் வாடினார். அன்பரின் மன நிலையறிந்த பகவான், "உன்னை விடாமல் பற்றிக்கொள் ."

பகவான் சொன்னது உடனடியாகப் புரியாவிட்டாலும், அன்பர் மகிழ்வுடன் திரும்பினார். பின் he contemplated on the essence of what Bhagavan said.

மனது மாய மந்திரங்கள் செய்து இயல்புநிலையில் இருந்து அடங்காத குதிரையாக ஓடித் திரிவது. களைத்து மீண்டும் இயல்பு நிலைக்கு வரவேண்டும் என்பது எழுதப் படாத நியதி.

Sunandaji was giving an analogy. Analogy of two brass vessels of equal measurement. One was extraordinarily bright and brilliant. The other was damn dull and tarnished. The latter one when cleansed became as brilliant and bright as the other one. The real nature is to remain bright.

“All problems of life arise from some weakness of mind. All weakness of mind is due to the mind’s ignorance of its own essential nature, which is universal and the source of infinite energy and intelligence.”

— Maharishi Mahesh Yogi 
on the Bhagavad-Gita: A New Translation and Commentary With Sanskrit Text -- Chapters 1 to 6



Thursday, February 19, 2026

📞 calls.....to answer or .....not?

A kin kept calling me.
I didn't have the assertive answer he was looking for. Not that I didn't want to answer his call. I didn't pick up the calls, and that was the time we were too tied to meet compliance due dates.

Yet again, the kin called.
I took the line, the kin didn't wait for me to say, hello. He started bombarding. I remained silent throughout his downpour. I believe in Eckhart's saying every swirling 🎩 Top has to lose its momentum. 

In this hand phone world, it's (mis) taken as discourtesy if the one at the other end didn't pick the call. It didn't matter in what situation the other one was.

A few days later I shared with the kin why it - not picking up the call - shouldn't be mistaken and tendered my apology.

It was psychological. He shot back a rejoinder raining advices on picking up calls and not stopping just with that, he went on further. I am used to share nice quotes if appealing to good friends and relatives. I take care while sending and choose to share with only to whom I feel they may like it. The kin too was in the list. His, - being elder is taken for granted to be a qualification to advice - advice: "Quoting may be easy. We all live in a practical world. Practising isn't that easy."

Just then a friend shared an excerpt from writer Balakumaran. I immediately forwarded the same to the kin along with a write up. Here they are.

The worst deficit
In the world is 
Not any fiscal deficit.

Insufficiency is in
Failing to respect 
The spouse.
Not just respect 
Between one spouse to the 
Other.
Helpless to see
In this patriarchy,
Patriarchy maze even
In twentieth century,
Not mere chauvinism thrives,
Worse and painsome is
 it's not all that rosy
On feminine side in
Families when it 
Comes to respecting 
Each other.

It takes a
Bhagavan Ramakrishna
To celebrate His
Better off,
Ma Sarada Devi.
Every devotee 
of Him
Is His follower
Or 
The one 
To Toe 
His line.



Wednesday, February 18, 2026

கடவுளோடு ஓர் உரையாடல்...a dialogue...with God

கடவுளோடு ஓர் உரையாடல்.
கடவுளா?!
பின் உரையாடலா?!!
விண்டவர் கண்டதில்லை,
கண்டவர் விண்டதில்லை,
பின் எங்கே கடவுள்?
விவேகானந்தரே வினவியது அல்லவா,
பரமஹம்சரிடம்.
பரமஹம்சரின்
சூக்ஷும தீக்ஷை,
நரேந்திரர் விவேகானந்தரானார்.
கடவுள்,
இறைவன்,
மஹா சக்தியால் ஆட்கொள்ளப்படுகிறார்.
தீக்ஷையோ,
மந்திர ஜபமோ 
இறையில் செலுத்தும் 
நல் வழிகள். 
ஞானிக்கோ ஆன்ம விசாரம்.
மனம் ஒடுங்கி இறையில் 
ஆழ்கையில் 
எங்கே விசாரம்,
உரையாடல் -
கடவுளுடன்?
ஆம் மௌன -
ஆழ்ந்த, பேரானந்தப் 
பெருவெளியில் -
மனோ லயமே 
உரையாடல்,
வார்த்தைகளின்றி,
இறையே தான் ஆன பின்.


Perplexity tries an English version:

A Conversation with God.God?!
Then a dialogue?!!
Those who have seen Him, didn't tell;
Those who have said, didn't see Him.
Then where is God?
Wasn't it Vivekananda who asked,
To the Paramahamsa.
Through the Paramahamsa's
Subtle initiation (diksha),
Naren became Swami Vivekananda.
Fully  grasped by divine power.
Initiation (diksha),
Mantra japa,
Are noble paths
 that lead to the divine.
For the jnani (sage), 
self-inquiry.
When the mind stills 
and dives deep into the divine,
Where is inquiry,
Dialogue—With God?
Yes, silence—In the profound,
 blissful vast expanse—
The dissolution of the mind itself
Is the conversation,
Without words,
Only after becoming 
one with the divine.


Monday, February 16, 2026

The Infinite..... காலமெல்லாம்


Only two things are infinite, the universe and human stupidity, and I'm not sure about the former.

Albert Einstein

Einstein சொல்வது sarcastic ஆகத் தோன்றக் கூடும். அவர் சொன்னதில் ஒரு paradox இருக்கிறது. தெரிகிறதா?

கால பரிமாணங்களுக்கு உட்படாத - infinite - இரண்டு சமாசாரங்களில் முதலாவதாக பிரபஞ்சத்தை - universe ஐ குறிப்பிடுகிறார் in the affirmative.


Only when he refers to the certainty of stupidity, he says he was unsure of former, ie is universe.

Clearer answer is in Bhagavan's famous question, 'who am I?'.

Ohm! Namo Bhagavate Ramanaya.

Sunday, February 15, 2026

Maha Shivaratri 2026

Day's, sorry, this holy, divine, sleep-vrata night to do, to-dos:
[ ] 4 pm darshan of Arulmigu Adivyadhihara Bagtha Anjaneyar - சிவனின் அடியார்களைத் தொழுது சிவனை வணங்குதல் சிறப்பு. ஹனுமான் சிவனடியாரா? Your question falls on my ear. If Hanuman is Shreshta Bhaktha of Lord Ram, yes Lord Hanuman is in a way Easwar 's Bhaktha. For, Lord Ram did the prathishta of Lord Ramanatha Swamy at Rameswaram.
[ ] 5.30 pm., 🙏 Prayers at Ramana Kendra, Chrompet and dhyan there.
[ ] 6.30 visit to AM Jain College ground, opp Airport to take part in Mahashivratri Isha celebrations.
[ ] 8 pm back home for a hot horlicks drink and watching various channels tele-casting Shivratri festivities for sometime.
[ ] 10 pm write ✍️ a piece how private temples can leverage various court decisions to guard themselves from the clutches of misused laws. Thanks to fillip by a CA friend and his lawyer on Inspiration in this regard. Also about how AI came handy in my exploration and a little research on the subject, how it helped me in distilling essence from the lengthy maze of provisions. And try drafting a specimen private trust deed for temples.
[ ] 12pm/day break - dhyan.
[ ] 00.30 am. To visit aranpani , a campaign for reviving temples. Thanks to brother Sriram for sharing the link.
[ ] to thank Easwar to have let me stay awake this long and hit the sack...to be ready for a fresh new day.

May Lord Shiva bless us all, enable a caring governance.
Ohm Namahshivaya.
Hara Hara Mahadev.


Sunday, January 25, 2026

எழுத்தாணி - writing tool... once upon a time

https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2026/Jan/25/tamil-nadu-are-achieving-great-success-by-publishing-world-class-books
சிறுவனாய் இருந்த போது எங்கள் ஐயா - தாத்தா - எழுத்தாணி - sharp writing tool - கொண்டு பனை ஓலையில் இசைகுடிமானம் எழுதுவதைப் பார்த்திருக்கிறேன். இசைகுடிமானம் என்பது நகரத்தார் இல்லங்களில் திருமண நாளன்று திருப்பூட்டியதும் இரு வீட்டுப் பெரியவர்களும் பதிவு செய்து கொள்ளும் மணப் பத்திரம். இன்று இது போன்று ஏடுகளில் எழுதாமல் அச்சடித்த சிறிய பதிவேட்டில் எழுதிக் கொள்கிறார்கள். திருப்பூட்டுவது என்பது உற்றார், உறவினர் ஆசியுடன் மணமகன் மணமகளுக்கு மங்கள நாண், திருமாங்கல்யம் அணிவித்து திருமண நிகழ்வை தெரிவிப்பது. என்னதான் நவீனம் என்றாலும், பழமையை சில தருணங்களிலாவது தவிர்ப்பது கஷ்டமாக இருக்கிறது, குறிப்பாக, இசைகுடிமானம் எழுதும்போது. At least we can use these parallelly. இவ்வாறு செய்கிற போது எழுத்தாணி போன்ற பொருட்கள் just museum piece ஆக மட்டுமே ஆகாது. எழுதுகிற வழக்கம் காலப் போக்கில் கரைந்து விடாது தொடரும்.

சைவ சமயத்தை வாழ்வியலாகக் கொண்ட நகரத்தார் இல்லங்களில் எல்லாம் தேவாரம், திருவாசகம், திருமுறைகள் தாங்கிய ஓலைச் சுவடிகள் இரண்டு மூன்று தலைமுறைகள் முன்பு நம் பாட்டையாக்கள் அதீத கவனம் மேற்கொண்டு பாதுகாத்து வந்தனர்.  இன்றைய நிலை தெரியவில்லை.

தமிழ்க் காவலர்கள் என்று பறை சாற்றிக்கொண்டு தாளில் இருக்கும் தமிழையே பிழை இன்றிப் பேசத் திணறும் இவர்கள் தமிழைக் காத்தால், தலை வணங்குவோம். 

 எஞ்சி, மிஞ்சிய ஓலைச் சுவடிகளை மிகுந்த சிரமங்களுக்கு இடையே படாத பாடு பட்டு மீட்டு எடுத்து இன்றைய தலைமுறை தெரிந்து கொள்ளச் செய்த 
தமிழ்த் தாத்தா உ வே சா அவர்களை நன்றியுடன் நாளும் வணங்கி நினைவில் போற்றுவோம்.

Tuesday, January 13, 2026

வார்த்தைக்குள் வாழ்க்கை, a brief review..before reading fully

To test if the rice has boiled to proper structure, it doesn't require to test all the morsels. Just a grain suffices.

One of my good picks in this ongoing The Famous Jan Chennai Maga Book 📚 Fair is

Yes words are so powerful - they can make or Mar. Saint Valluvar in His Master Treatise, திருக்குறள் was so emphatic on saying only good things and saying preferably euphemistically. Sample:
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.  

The Author of this nice gem liberally uses Saint's couplets in right contexts across the book. She just doesn't confine to Kural only. She quotes from Hindu Epics, western literatures and interlaces striking short stories. All to stress why to speak only positives.

One excerpt to show why it makes the must read and must adhere to:

"வார்த்தை பலிக்குமா என்றால் நான் ஏதோ ஒரு ஆத்திரத்தில் சொன்னேன் பலித்து விட்டதே என்று புலம்பும் நிலையில் இருப்பவருக்குத் தெரியும் அது உண்மை தான் என்று."

 So good is this 📚 book and my current read. I'm just midway....can vouch how it impacts. I can feel, there's a consciousness, a sort of measure before words popping out from me.

The contents are in 151 pages and 16 chapters.
Deserves deep and meticulous reading. Would highly recommend.

Happy reading.

Wednesday, January 7, 2026

புதிதாய் ஒன்றா? Are we...? or becoming,

இருபது வருடங்களுக்கு முன்.
ஒரு புதிய இளம் தொழிலதிபர் ஆலோசனைகளுக்கு அவ்வப்பொழுது சந்திப்பார். வரும்பொழுதெல்லாம் மிடுக்காக Safari suit, branded shoes இல் வருவார். பின்னொரு முறை தூய வெள்ளாடைகளில் - வேஷ்டி, கதர் சட்டை அணிந்து கால்களில் காலனி இல்லாமல் நெற்றி நிறைய திருநீறும், மனக்க மணக்க சந்தனத் திலகமுமாய் ஊடே குங்குமத் திலகத்துடன் சாக்ஷாத் சிவனே காட்சி அளிப்பது போல் பிரசன்னமானார்.

என் புருவ மேலிடுதலை குறிப்பறிந்த அன்பர், அவர் அன்றைய அவதாரப் பின்புலத்தை சற்றே விளக்கினார். அன்றைய தினம் அவரின் முப்பாட்டனார் sanyasa தீக்ஷா பெற்று குடும்ப பந்தங்களில் இருந்து விடுபட்ட நாளாம். ஆண்டு தோறும் குரு பூஜை நிகழ்கிறது.

தானும் அவ்வண்ணமே முப்பாட்டனார் வழி பற்றி ஒரு நாள் ஆகி விட விரும்புவதாகத் தெரிவித்திருந்தார்.

நான் அமைதியாயிருந்தேன்.

ஏன் அமைதியாய் இருக்கிறீர்கள் என்றார்.

மனதில் அந்த நிமிடத்தில் தோன்றியதைத் தெரிவித்தேன். தவறா, சரியா இறைவனுக்கே வெளிச்சம்.

புதிதாக யாரும் புத்தானகப் போவதில்லை. இது ஏதும் பிசினஸ் Target ஓ, plan ஓ இல்லை. ஆகாயம் எப்பொழுதும் இருப்பது தான். தோன்றி மறையும் மேகங்கள் மேகங்களே ஆகாயம் போன்ற தோற்ற மாயையை ஏற்படுத்தி விடுகின்றன.

சிறிது நேரம் நித்சலனம், பேரமைதி.

நண்பர் விடை பெற்றார். எழுந்து செல்கையில், புத்தனே அழகாக எழுந்து நடந்து செல்வது போல் இருந்தது.

Friday, January 2, 2026

Ego....go...a big bubble...... தான் எனும் பூஜ்யம்....VACUUM....0000000

தான் தான் 
அனைத்தும் - Ego,
அனைவரும் -
குறிப்பாக உறவு முறைகளில்,
தன் சொல்,
- சரியாய் இருந்தாலும், இல்லாவிடினும்,
கேட்க வேண்டும் 
என்றால்
பரஸ்பரம் என்பது எங்கே.
இங்கே யார் பெரிது,
யார் சிறிது?
யார் உயர்வு,
யார் தாழ்வு?!
தான் தான் 
மேலிடுகிற பொழுது
நிம்மதி தனக்கும்
இல்லை,
பிறருக்கும் இல்லை.
மனமே அமைதி கொள்.
அமைதி நிலவட்டும்.
Ohm Shanthi.!


Perplexity tried its best and here's the version in English, in dedication to those not familiar with Tamil: with slight intervention - human editing, where needed.

Vanity, Ego
Everything—Ego,
Everyone—
Especially in relationships,
One's own word—
Whether right or wrong—
Must be heard.
But then,
Where is mutuality?
Here, who is greater,
Who is lesser?
Who is higher,
Who is lower?!
Ego,
When imposing oneself,
There is no peace for oneself,
Nor for others.
O mind, find peace.
Let peace prevail.
Om Shanti!