Wednesday, January 7, 2026

புதிதாய் ஒன்றா? Are we...? or becoming,

இருபது வருடங்களுக்கு முன்.
ஒரு புதிய இளம் தொழிலதிபர் ஆலோசனைகளுக்கு அவ்வப்பொழுது சந்திப்பார். வரும்பொழுதெல்லாம் மிடுக்காக Safari suit, branded shoes இல் வருவார். பின்னொரு முறை தூய வெள்ளாடைகளில் - வேஷ்டி, கதர் சட்டை அணிந்து கால்களில் காலனி இல்லாமல் நெற்றி நிறைய திருநீறும், மனக்க மணக்க சந்தனத் திலகமுமாய் ஊடே குங்குமத் திலகத்துடன் சாக்ஷாத் சிவனே காட்சி அளிப்பது போல் பிரசன்னமானார்.

என் புருவ மேலிடுதலை குறிப்பறிந்த அன்பர், அவர் அன்றைய அவதாரப் பின்புலத்தை சற்றே விளக்கினார். அன்றைய தினம் அவரின் முப்பாட்டனார் sanyasa தீக்ஷா பெற்று குடும்ப பந்தங்களில் இருந்து விடுபட்ட நாளாம். ஆண்டு தோறும் குரு பூஜை நிகழ்கிறது.

தானும் அவ்வண்ணமே முப்பாட்டனார் வழி பற்றி ஒரு நாள் ஆகி விட விரும்புவதாகத் தெரிவித்திருந்தார்.

நான் அமைதியாயிருந்தேன்.

ஏன் அமைதியாய் இருக்கிறீர்கள் என்றார்.

மனதில் அந்த நிமிடத்தில் தோன்றியதைத் தெரிவித்தேன். தவறா, சரியா இறைவனுக்கே வெளிச்சம்.

புதிதாக யாரும் புத்தானகப் போவதில்லை. இது ஏதும் பிசினஸ் Target ஓ, plan ஓ இல்லை. ஆகாயம் எப்பொழுதும் இருப்பது தான். தோன்றி மறையும் மேகங்கள் மேகங்களே ஆகாயம் போன்ற தோற்ற மாயையை ஏற்படுத்தி விடுகின்றன.

சிறிது நேரம் நித்சலனம், பேரமைதி.

நண்பர் விடை பெற்றார். எழுந்து செல்கையில், புத்தனே அழகாக எழுந்து நடந்து செல்வது போல் இருந்தது.

No comments:

Post a Comment