கடவுளா?!
பின் உரையடலா?!!
விண்டவர் கண்டதில்லை,
கண்டவர் விண்டதில்லை,
பின் எங்கே கடவுள்?
விவேகானந்தரே வினவியது அல்லவா,
பரமஹம்சரிடம்.
பரமஹம்சரின்
சூக்ஷும தீக்ஷை,
நரேந்திரர் விவேகானந்தரானார்.
கடவுள்,
இறைவன்,
மஹா சக்தியால் ஆட்கொள்ளப்படுகிறார்.
தீக்ஷையோ,
மந்திர ஜபமோ
இறையில் செலுத்தும்
நல் வழிகள்.
ஞானிக்கோ ஆன்ம விசாரம்.
மனம் ஒடுங்கி இறையில்
ஆழ்கையில்
எங்கே விசாரம்,
உரையாடல் -
கடவுளுடன்?
ஆம் மௌன -
ஆழ்ந்த, பேரானந்தப்
பெருவெளியில் -
மனோ லயமே
உரையாடல்,
வார்த்தைகளின்றி,
இறையே தான் ஆன பின்.
Perplexity tries an English version:
A Conversation with God.God?!
Then a dialogue?!!
Those who have seen Him, didn't tell;
Those who have said, didn't see Him.
Then where is God?
Wasn't it Vivekananda who asked,
To the Paramahamsa.
Through the Paramahamsa's
Subtle initiation (diksha),
Naren became Swami Vivekananda.
Fully grasped by divine power.
Initiation (diksha),
Mantra japa,
Are noble paths
that lead to the divine.
For the jnani (sage),
self-inquiry.
When the mind stills
and dives deep into the divine,
Where is inquiry,
Dialogue—With God?
Yes, silence—In the profound,
blissful vast expanse—
The dissolution of the mind itself
Is the conversation,
Without words,
Only after becoming
one with the divine.
No comments:
Post a Comment