1987
என் முதல் வேலை பெங்களூருவில்.
மேலதிகாரி திரு. செந்தில்.
என் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட அன்பு மற்றும் அதே வேலையில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதவர்.
ஓரிரு முறை என்னிடம் செய்ய வேண்டிய பணிகள் குறித்து சில வழிமுறைகள் சொல்வார். நானும் காதில் வாங்கியபடி வேலையைத் தொடர்வேன்.
திடீரென்று ஒரு நாள், என் அருகில் வந்து,
" நீயென்ன computer ஆ ?".
திகைத்தேன்.
அவர் தொடர்ந்தார், "நான் சொல்பவற்றை நீ குறித்துக் கொள்வதே இல்லை. நாம் சாதாரண மனிதர்கள். Computer போல அனைத்தும் நமது நினைவில் நிற்பது இல்லை. See how important it's to make notes.".
பசு மரத்து ஆணி போல் மனதில் இறங்கியது.
இங்கொன்றும், அங்கொன்றும் மனித வாழ்வில் படிப்பதென்பது நிகழ்ந்து கொண்டே இருக்கும். சமயங்களில் மனத்தைத் தைக்கின்ற விஷயங்களும் உண்டு. படித்து விட்டு கடந்து சென்றால் காலப் போக்கில் கற்பூரம் போல் கரைந்து விடும்.
அவ்வாறு தைக்கின்ற ஒன்றைப் படித்தேன். அது கற்பூரமாய் காற்றில் கரைத்து விட மனமின்றி, என் மேலதிகாரி திரு செந்தில் அறிவுரையை நினைவு கூர்ந்து, படித்ததைக் குறித்து வைத்து பகிர்கிறேன்.
இதோ அந்தப் பகிர்வு. ஒவ்வொரு பெண் பிள்ளை பெற்ற தகப்பனுக்கும், sorry, தாயுமானவனுக்கும் சமர்ப்பணம்.:
" ஆனந்தமோ வருத்தமோ
வெங்காயமோ புகையோ
அவள் கண்ணில் நீர் வழிந்தால்
அவன் கண்ணில் நீர் முட்டும்,
அவள் அவனின் அப்பா."
இவ்வழகிய கவிதையை வடித்தவர் ஒரு மருத்துவர். பெயர். Dr விசாகப் பெருமாள் , ஊர், வாணியம்பாடி
No comments:
Post a Comment