Wednesday, January 7, 2026

புதிதாய் ஒன்றா? Are we...? or becoming,

இருபது வருடங்களுக்கு முன்.
ஒரு புதிய இளம் தொழிலதிபர் ஆலோசனைகளுக்கு அவ்வப்பொழுது சந்திப்பார். வரும்பொழுதெல்லாம் மிடுக்காக Safari suit, branded shoes இல் வருவார். பின்னொரு முறை தூய வெள்ளாடைகளில் - வேஷ்டி, கதர் சட்டை அணிந்து கால்களில் காலனி இல்லாமல் நெற்றி நிறைய திருநீறும், மனக்க மணக்க சந்தனத் திலகமுமாய் ஊடே குங்குமத் திலகத்துடன் சாக்ஷாத் சிவனே காட்சி அளிப்பது போல் பிரசன்னமானார்.

என் புருவ மேலிடுதலை குறிப்பறிந்த அன்பர், அவர் அன்றைய அவதாரப் பின்புலத்தை சற்றே விளக்கினார். அன்றைய தினம் அவரின் முப்பாட்டனார் sanyasa தீக்ஷா பெற்று குடும்ப பந்தங்களில் இருந்து விடுபட்ட நாளாம். ஆண்டு தோறும் குரு பூஜை நிகழ்கிறது.

தானும் அவ்வண்ணமே முப்பாட்டனார் வழி பற்றி ஒரு நாள் ஆகி விட விரும்புவதாகத் தெரிவித்திருந்தார்.

நான் அமைதியாயிருந்தேன்.

ஏன் அமைதியாய் இருக்கிறீர்கள் என்றார்.

மனதில் அந்த நிமிடத்தில் தோன்றியதைத் தெரிவித்தேன். தவறா, சரியா இறைவனுக்கே வெளிச்சம்.

புதிதாக யாரும் புத்தானகப் போவதில்லை. இது ஏதும் பிசினஸ் Target ஓ, plan ஓ இல்லை. ஆகாயம் எப்பொழுதும் இருப்பது தான். தோன்றி மறையும் மேகங்கள் மேகங்களே ஆகாயம் போன்ற தோற்ற மாயையை ஏற்படுத்தி விடுகின்றன.

சிறிது நேரம் நித்சலனம், பேரமைதி.

நண்பர் விடை பெற்றார். எழுந்து செல்கையில், புத்தனே அழகாக எழுந்து நடந்து செல்வது போல் இருந்தது.

Friday, January 2, 2026

Ego....go...a big bubble...... தான் எனும் பூஜ்யம்....VACUUM....0000000

தான் தான் 
அனைத்தும் - Ego,
அனைவரும் -
குறிப்பாக உறவு முறைகளில்,
தன் சொல்,
- சரியாய் இருந்தாலும், இல்லாவிடினும்,
கேட்க வேண்டும் 
என்றால்
பரஸ்பரம் என்பது எங்கே.
இங்கே யார் பெரிது,
யார் சிறிது?
யார் உயர்வு,
யார் தாழ்வு?!
தான் தான் 
மேலிடுகிற பொழுது
நிம்மதி தனக்கும்
இல்லை,
பிறருக்கும் இல்லை.
மனமே அமைதி கொள்.
அமைதி நிலவட்டும்.
Ohm Shanthi.!


Perplexity tried its best and here's the version in English, in dedication to those not familiar with Tamil: with slight intervention - human editing, where needed.

Vanity, Ego
Everything—Ego,
Everyone—
Especially in relationships,
One's own word—
Whether right or wrong—
Must be heard.
But then,
Where is mutuality?
Here, who is greater,
Who is lesser?
Who is higher,
Who is lower?!
Ego,
When imposing oneself,
There is no peace for oneself,
Nor for others.
O mind, find peace.
Let peace prevail.
Om Shanti!

Tuesday, December 30, 2025

காற்றும் ... கடவுளும் காணாப் பொருளா...

இறைவன்
இடைவிடாத விவாதப் பொருள்.
எங்கே இருந்தால் காட்டு 
என்கிறார் திருவாளர் நாத்திகர்.
இறை அன்றி
யாதும் இல என்கிறார்
ஆஸ்திகர்.
காற்று கண்ணில் தெரிவதில்லை.
காற்றே இல்லையா?
உணர்பவர் உணரட்டும்.
உணராதவர்க்கும் உணர்வதின்றி
வேறு வழியில்லை
எனும் உணரும் நிலை 
சித்திக்கும்.
கடவுளோ, இறைவனோ
நாம் விளிக்கும் பதங்களே.
நாம் காணாது உணர்ந்த
காற்றை காற்று 
என விளிப்பது.
பரம்பொருள், பிரம்மம் -
ஏனைய பெயர்கள்
யாவுமாய், யாவையுமாய் 
வியாபித்த மஹா 
பிரம்மாண்டம் -
Super Radar
We can't be away.
तत् त्वम् असि 
Ta tvam asi.
நீயே அது.
 “Thou Art That”.

Saturday, December 20, 2025

The Journey within..... உன்னை அறிந்தால்...

In that fragment,
Split of a second,
That Spark,
Oh, you got it.
The journey is set.
On Your march,
Not anywhere else,
A superb one 
One Within 
Into Your own self,
Yes, The Self.
The Divine Self.
All Blissful.

கண் இமைக்கும் நேரம்,
மன்னிக்க, நேரம் என்பது 
வெகு நேரம்.
ஒரு, ஒரே வினாடி,
இல்லை இல்லை 
வினாடிக்கும் குறைவாகவே
ஓர் மின்னல், ஒளி.
பயணம் தொடங்கியது.
பயணம் 
எங்கோ இல்லை,
அற்புதமானது
உள் உள்ளே
உன் சொந்த ஆன்மாவில்,
ஆம், ஆன்மா.
இறை ஆன்மா.
எல்லா இன்பமும் நிறைந்தது.

Courtesy Tamil version: Perplexity with editing wherever required.

Wednesday, December 17, 2025

கடவுளின் கண்ணாமூச்சி ..hide and seek game

நித்சலனம் -
நினைவுகள் ஓய்ந்த 
ஆழ்ந்த அமைதி 
ஆன்ம நிலை.

நிலை இரண்டு:
அலை அலையாய் 
நினைவுகள்.

நிஜமெது ?

வினாவும் 
விடையும்
மனிதா, நீயே
தேடு என்று 
கால தேவனின்
கண்ணாமூச்சி 
விளையாட்டு.


Stillness profound—
Memories hushed, unbound,
Deep silence reigns,
Soul's true domain.

Yet state the second:
Thoughts crash like waves unending,
Wave after wave, unrelenting.

Which holds the truth we seek?

The query and its key—
O human, search within, you'll see,
It's god.
God plays hide and seek.


Taile note.:  
English version courtesy:  Perplexity with slight edit.

Tuesday, December 9, 2025

மண்ணில் நல்ல வண்ணம்.....Mind in your hand

மனம் போன போக்கிலே...
விட்டு விடலாம் என்றால்...
எல்லாம் தாறுமாறு ஆகிவிடாதா?
கடவுளுக்கு thriller ரொம்ப பிடிக்கும் போலிருக்கிறது. இஷ்டம் போல விளையாடு என்று மனிதனுக்கு certain leeway யையும் கொடுத்து, கைமீறிப் போகாமல் பார்த்துக் கொள்ள லகானையும் certain foreboding wisdom ஐயும் கொடுத்து இருப்பது போல தெரிகிறது.

இந்த ஜனநமே முன் வினை விளைவுதான். இம்மையும், மறுமையும் இல்லா நிலை பெறத்தானோ இந்த கடவுள் தந்த leeway. கடவுளே 360 degree யும் மனிதனைப் பார்த்துக் கொள்ள இயலுமா? He - The God is Master Management Guru. Hence His delegation of. Leeway, லகான் in மனிதனின் கைகளில்.

அரச குலத்திலே பிறந்து மஹா பாரத யுத்தத்துக்கு முன் போர் பல புரிந்த அர்ஜுனன், உற்றார், உறவினர், ஆச்சார்யப் பெருமகனார்கள் உடன் போரிட்டு அவர்கள் மடிவது குல நாசங்களையும், சகுனக் கேடுகளையும் ஏற்படுத்துமே என்று புலம்பிய போது, கீதாச்சாரியன் சொல்கிறான். சகுனம் நல்லது, கெட்டது இருந்தாலும், இல்லாவிடினும், எண்ணித் துணிந்த மஹா வீரனுக்கு தன் கடமையினின்று ஏதோ காரணங்களைக் காட்டி விலகுவது அழகல்ல என்கிறார். B.G.1.30.

விதியின் வலிமையை பகவான் உண்மை, உண்மையில்லை என்று மறுதலிக்க வில்லை. முயற்றின்மையை கிருஷ்ணா பரமாத்மா encourage செய்யவே இல்லை.

மனிதன் கடவுள் அளித்த leeway ஐ பயன்படுத்தி செம்மையுற இயலாது என்றால் Brahadarak உபநிஷத்தில் இப்படிச் சொல்லியிருக்கக் கூடுமா:

"You are what your deep, driving desire is. As your desire is, so is your will. As your will is, so is your deed. As your deed is, so is your destiny."

அரிது , அரிதான கிடைத்ததற்கு அரிய மனிதப் பிறவியில்,

என் கடன் பணி செய்து கிடப்பதே என் நன்மை செய்து நலம் பெறுவோம்.

Lokah Samastah Sukhino Bhavantu

Saturday, December 6, 2025

காளிசா ....Kaleeswara

இந்தக் கோவிலில் வைகாசி உற்சவத்தின் போது ஆரூரில் பக்தர்கள் பரவசமாக தியாகேசா என்று உற்சாகம் ஆக அழைப்பது போல், காளையார்கோவிலில் காளிசா காளிசா என்று அழைப்பர்.

பிரதான ஈஸ்வரரின் திருநாமம் ஸ்வர்ண காளீஸ்வரர். தாயாரின் திருநாமம் ஸ்வர்ண வல்லி. சிவகங்கை சமஸ்தானத்தின் ஆலோசனை உடன் எங்கள் பாட்டி - அப்பத்தா, அப்பாவின் அம்மா வழி மூதாதையர்கள் ஈஸ்வரன் சன்னதியையும், அப்பா வழி முப்பட்டனர்கள் அம்மன் சன்னதியையும் திருப்பணிக்கு ஈஸ்வர அனுகிரகம் பெற்றனர்.

இதன் காரணமாக எங்கள் இல்லத்தில் பிறக்கும் பெண் குழந்தைகள் பலருக்கு ஸ்வர்ண வல்லி என்று பெயரிடுவது வழக்கம். சமீபத்தில் காலமான என் அத்தைக்கு, 94 வயது ஸ்வர்ண வல்லி என்று பெயர்.

Picture courtesy: சகோதரி சிவகாமி RMSP V


அத்தைக்குப் பின் ஒரு மாத காலத்தில் ஈஸ்வரன் பொற்பதங்களை அடைந்த மாமா, 96 வைகாசி உற்சவ 10 நாட்களும் காளையார்கோவிலிலேயே இருப்பார்.

வீரமங்கை வேலு நாச்சியாருக்கு உதவ வந்த மருது சகோதரர்கள் சரணடையவிட்டால், காளையார்கோவில் இரட்டைக் கோபுரங்களைத் தகர்த்துவிடுவோம் என்று ஆங்கிலேய அரசு கெடு விதித்தால், கோவிலைக் காக்க தன்னுயிர் ஈந்த மாமன்னர்கள் மருது சகோதரர்கள். அன்னார் தூக்கில் இடப்பட்ட நினைவிடம் திருப்பத்தூரில் அமைந்திருக்கிறது.