Wednesday, September 16, 2026

எது நிஜம்?....are we puppets?

Reader's Digest இல் வெகு காலம் முன் படித்த கட்டுரை ஒன்று. நம் அன்றாட வாழ்வின் யதார்த்தங்களை அலசியது.

உதாரணம்: வீட்டின் சாவியை, வண்டி சாவியை எங்கோ வைத்திருப்போம். வெளியில் செல்ல வேண்டும் சமயத்தில் சாவியை எங்கே வைத்தோம் என்ற நினைவு உடனே தோன்றாது. வீடே அல்லோலகல்லோலப்படும். எரிச்சல், பதற்றம், படபடப்பு. பின் ஏன் வராது உயர் ரத்த அழுத்தம் - BP.

இவையெல்லாம் தவிர்க்க வழி சொல்வதாக அந்தக் கட்டுரை. புத்தகம் பாதி படித்து தொடர வேண்டிய பக்கத்தில் book mark வைப்பது, சாவியை பத்திரமாக சாவிகொத்தில் மாட்டி வைப்பது போன்று தவறாது ஏற்படுத்திக் கொள்ள பழக்கங்கள் குறித்து.

பழக்கம் ஏற்படுத்திக் கொள்வது பின்னர் இருக்கட்டும். நாம் வெளியில் செல்ல வேண்டுமே, சாவி வேண்டுமே என்ன செய்வது? சாவி எங்கே வைத்தோம், சட்டென்று நினைவிற்கு வரவில்லையே?

அத்தனை பதற்றத்திலும், திடீரென dining table அடைசல்களுக்கிடையே ஏதோ ஒன்று இருப்பது கண்களுக்கு புலப்படும். ஆஹா சாவி கிடைத்து விட்டது. ஏதோ ஒரு புதையலே கிடைத்து விட்டது மாதிரி.

சரி.
நம் கண்களை டைனிங் டேபிள் பக்கம் ஈர்த்தது எது?

நமது கண்கள், புலன்கள் யாவும் தாண்டி ஏதோ ஒரு பிரபஞ்ச சக்தி நமக்கு உதவவே இயங்கிக்கொண்டிருக்கிறது.

ஷேக்ஸ்பியர் நினைவிற்கு வருகிறார், when he said, "All the world is a stage".

ஷேக்ஸ்பிருக்கெல்லாம் நம் தாத்தன் சித்த புருஷன் கடுவெளிச் சித்தன்,
"காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா".

இந்தப் பையைத் தாண்டி பிரபஞ்ச சக்தியிலே திளைத்திருக்கத் தான் இத்தனை தவ யோகிகளும், சித்த புருஷர்களும் வழி காட்டிச் சென்று இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment