Wednesday, May 15, 2024

பகவானின் - In the Bhagavan's Grip

90 களின் துவக்கத்தில் தனிக்கைப் பணி நிமித்தம் வெளியூர்களுக்கு சென்று வர வேண்டியிருந்தது.

அவ்வாறு செல்கையில் திருவண்ணாமலையும், பாண்டிச்சேரிக்கும் சென்றோம். இப்பயணங்கள் பெரும் மாற்றங்களை கொண்டு வருபவைகளாக அமையப் போகின்றன என்பதைப் பற்றி கனவிலும் அறிந்திலேன், பயணம் மேற்கொள்ளும் முன்பாக.

ஏன்?
திருவண்ணாமலை என்ற ஊரின் பெயர் அறிந்திருந்தேனே, தவிர இது சித்தர்கள் பாதம் பதிந்த பூமி என்றும், ஞானத் தபோவனர்கள் தபஸ் செய்த ஸ்தலம் என்றும் சிறிதும் தெரிந்திருக்கவில்லை.

பணி ஓய்வு நேங்களில் சென்ற இடங்களில் உள்ள சுற்றுலா சிறப்பு மையங்கள், கடைகளுக்குச் சென்று அவ்விடத்தில் கிடைக்கும் பயனுள்ள பிரத்யேக, மற்றும் உபயோகமுள்ள பொருட்களை வாங்குவது என்பதிலேயே மனம் ஈடுபட்டிருக்கும். புண்ய சேத்திரங்களுக்கு செல்வது எல்லாம் இளம் வயதில் பட்டியலின் பின் வரிசையில் தான். இந்த வரிசை கூட வரும் சகாவைப் பொறுத்தது. இந்த சமயத்தில் என்னுடன் வந்த நண்பர் ஆச்சார அனுஷ்டானுங்களுக்கே பிரதானம் அளிப்பவர். சரி என்று அவருடன்
ரமண ஆஸ்ரமம் சென்றேன்.

விசாலமான இயற்கையும் ஆன்மீகமும் நிறைந்த அமைதியான சூழல். வளாகத்துக்குள் நுழைந்து முதலில் உள்ள ஆலயத்துக்குள் செல்கிறோம். இரண்டடுக்கு உள்ள கோவிலில் முதல் அடுக்கில் உள் பிரவேசித்ததும் வலது புறம் மகரிஷியின் மார்பளவு சிலை. உள் இரண்டாம் கற்பக்ரஹம் அமைந்த மண்டபத்தை அடையும் முன், வலது புற வெளிச் சுவற்றில் பகவானின் மரணிப்பதின் அனுபவம். முழுக்க முழுக்க ஆங்கிலத்தில். கல்லூரி முடித்து, professional course exposure இருந்தும் அதிகமாக ஆங்கில பரிச்சயம் இல்லை. சரி. க்ரீக் லத்தீன் போன்று தோன்றினாலும் முழுவதும் படித்து விடுவோம் என்று முடிவு செய்து வரி விடாமல் படித்தும் விட்டோம். படித்து விட்டோமே தவிர, படித்ததெல்லாம் நமது கிரஹிப்புக்கு உட்பட்டதாக இல்லை. The words Rigor Mortis, self எல்லாம் மிரட்டின. Self என்றால் தேஹத் தொடர்புடையது என்கிற அளவிலேயே எனது அறிவின் எல்லை. ஆனாலும் மனதில் இதில் உள்ளார்ந்த, ஆழமான, நுட்பமான ஒவ்வொரு மனிதனும் கட்டாயம் உணர வேண்டிய கருத்து இருக்கிறது என்று உணர்ந்தேன்.

அம்முதல் தரிசனத்திற்குப் பிறகு மீண்டும் மீண்டும் செல்ல வேண்டும் என்கிற உணர்வு மேலோங்கிற்று.  

Then Bhagavan showed the way:


God and the Guru will only show the way to release; they will not by themselves take the soul to the state of release. In truth, God and the Guru are not different. Just as the prey which has fallen into the jaws of a tiger has no escape, so those who have come within the ambit of the Guru’s gracious look will be saved by the Guru and will not get lost; yet, each one should by his own effort pursue the path shown by God or Guru and gain release. One can know oneself only with one’s own eye of knowledge, and not with somebody else’s. Does he who is Rama require the help of a mirror to know that he is Rama?

Pranam to Bhagavan

No comments:

Post a Comment