Monday, June 15, 2026

In the Grip, ...Bhagavan's....பகவானின் அருட் பார்வை

முதல் முறை.
30 வருடங்களுக்கு முன்பு.
திருவண்ணாமலைக்கு பணி நிமித்தம் சென்றது மட்டுமல்ல. பகவானைப் பற்றி கேள்வியுற்றதும்... Mean just hearing about His Name, nothing more.

இப்பொழுது போல் கால் வைக்க இடம் இல்லாமல் இல்லை. ஞானப் பிழம்பான 
அருணாசலேஸ்வரர் என்கிற அண்ணாமலையார் முன் ஆற அமர்ந்து தியானிக்கலாம். No ஜருகண்டி...

பிரமாண்ட ஆலயம் நுழையும் முன்னே. வானுயர்ந்த கோபுரம். நடுவில் சிவ சிவ என்ற வாசகம். நிமிர்ந்து பார்த்து ஒரு நிமிடம் தனை - தேஹம், மனது, புத்தி தான் நான் என்பது மறந்து இறையிலே கரையும் அனுபவம், மஹா ஸ்வாமி ஏன் ராஜ கோபுரங்கள் வேண்டும் என்று தெய்வத்தின் குரலில் எடுத்துரைத்தது நினைவில் மின்னல் ஆடிற்று. ஒவ்வொரு முறை கோபுர தரிசனம் செய்யும் க்ஷனம் சித்த சித்தியாகும் தருணம் என்பார்.

ஆலய தரிசனம் ஆயிற்று.

கால்கள் ஆஸ்ரமம் நோக்கி.

மிக அமைதி. மஹா விஸ்தாரமாக.

மாத்ரு புதேஸ்வர் ஆலயம் - அன்னை அழகம்மாள் அமரரான பின் , அவர் நினைவாக, உள்ளே நுழைகிறோம். ஈஸ்வரர் சந்நிதி. ஆஸ்ரமம் நுழைந்ததிலிருந்து, ஏதோ ஒன்று - நாம் நம் வசமில்லை - ஆட்கொண்டது போல், விவரிக்க இயலாத உணர்வு. Felt completely light, as if like a feather. ஆலயம் உள் வந்ததும், வலது புறம் பகவானின் மார்பளவு சிலா ரூபம். சற்று முன் நோக்கி நகர்ந்தால் உள் ஆலயத்தின் வெளிச் சுற்று கற் சுவரில் பகவானின் sudden fear of death and how He came over it once and for all in முழுக்க முழுக்க ஆங்கிலத்தில். அவ்வளவு பெரிய ஆங்கிலப் பதிவுகளை முன் படித்த அனுபவங்கள் மிகவும் சொற்பமே. இருப்பினும் பொறுமையாக முழுவதும் படித்து முடிந்த பின் தான் மாத்ரு புதேஸ்வர் சன்னதிக்குள் சென்றோம். படித்து விட்டோம் என்றாலும், முழுமையாக கிரகிக்க it took lot of repeated readings and time.

நாம் சென்ற காலம் 90 களின் தொடக்கத்தில். பகவான் சித்தியானது 1950 இல்.

மீண்டும் பகவான் படத்தில் உள்ள வாசகங்கள்:

பகவான் தேக நிலை கடந்து கால காலங்கள் ஆனாலும், He will All Souls, the moment one puts his First Foot in the Asram.

Ohm Namo Bhagavate Ramanaya!

No comments:

Post a Comment