ஆமோதிப்போர் கடவுள் எனலாம். ஏனைய பதங்கொண்டும் - இறைவன், படைத்தவன், பகவான், பரம்பொருள் இன்னபிற - ஆராதிக்கலாம்.
இல்லை - கடவுள் இல்லை என்போருக்கும்
இங்கு - சனாதானத்தில் இடம் உண்டு.
எது எப்படியாயினும் ஸ்ருஷ்டி மூலம் எங்கோ இருக்க வேண்டும் என்பதை யார் மறுக்க இயலும்.
அந்த ஆதியும், அந்தமும் இல்லா அருட் பெரும் ஜோதியைக் காண்பதா, அறிவதா அன்றி உணர்வதா ?
கண்டவர் விண்டிலர் என்பர். விண்டிலர் என்பதால் காணாதவரா? காண்பது என்பது உணர்வது தானே?!
விண்டவர் என்பார் உணர்ந்தது பகர்ந்தவர் அன்றோ!?
உணரும் பேரானந்த நிலை யாவர்க்கும் சாத்தியம் என்பதே பகவான் ரமண மஹான், spiritual authors like Eckhart Tolle போன்றோர் எடுத்துரைப்பது.
வாழ்க வளமுடன்.
No comments:
Post a Comment