Thursday, July 18, 2024

நுணுக்கு அரிய நுண் உணர்வே.


நுணுக்கு அரிய நுண் உணர்வே.

எங்ஞனம் விளக்குவது
என்றறியாது இருந்தேன்.
மாணிக்கவாசகர் முதல்
ரமண மஹரிஷி மஹான்கள் 
போன்ற
ஞானத்தபோவனர்கள்
எடுத்துரைத்த நுண்ணிய
ஆன்ம அறிதலை
எளிதாக 
யாவரும் தானாய் 
அறியும் வண்ணம்
எளிதாய் விளக்குகிறார்
இந்த அம்மையார்.

கிருபானந்த வாரியார் கூறியது
போல 
தண்ணீர் எங்கும் இருக்கிறது.
தாகம் தீர நாம் தான்
மொண்டு குடிக்க வேண்டும்.

நாம் மட்டும் ஞான நிலை
உணர்ந்தால் போதுமா?
தலாய் லாமா கூறுகிறார்,
இவ்வுலகில் உள்ள 
8 வயது குழந்தைகள் 
எல்லாம் தவம் செய்தால் 
உலகில் குற்றங்கள்
யாவும் பெருமளவு
குறைந்திருக்கும்.

மஹா ஸ்வாமி
எல்லா அத்யவாஸ்யங்களும் 
எல்லா பிரஜைகளும் பெற்றிருக்கச் 
செய்வது ஒரு அரசன்
கடமை என்றாலும் 
அதனின் மேலான 
பிரஜைகள் தர்ம நெறிப்படி 
வாழும் வகை செய்தலே 
மன்னர்க்கு அழகு என்கிறார்.

சரியான ராஜாவைத்
தேர்ந்து எடுக்காதது யார் குற்றம்,
நாம் கனியிருப்ப காய் கவர்ந்தோமோ?!

No comments:

Post a Comment