Monday, July 1, 2024

ஆவுடையார் கோயில் - திருவசாகக் கோயில்

ஆவுடையார் கோயில் - திருவசாகக் கோயில்
தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி  
அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே....

சிவபுராணம் இயற்றிய கர்த்தா திருவாதவூர் திருத்தலத்தில் அவதரித்த மஹான் மாணிக்கவாசகர் மன்னர் குதிரை வாங்கக் கொடுத்த பணத்தில் எழுப்பிய திருக்கோயில் திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோவில். திருவாவடுதுறை ஆதீனத்தின் திருக்கோயில்.

கடந்த ஞாயிறு மாலை 4 மணி.

சன்னதி திறக்கப்படும் முன்னரேயே ஆலயத்தை அடைந்தோம். உள்ளே அன்பர்களும், தாய்மார்களும் உழவாரப்பணி செய்து கொண்டிருந்தார்கள். அப்பர் பெருமான் துவங்கிய திருப்பணி உழவாரப்பணி. மஹா ஸ்வாமி குறிப்பிட்ட பூர்த்த தர்மங்களில் ஒன்று. வாரத்தில் ஒரு நாளேனும் நம்மால் இயன்ற சிறு நற்பணி ஏதேனும் செய்தல் வேண்டும் என்கிறார்.
பணி செய்ய இயலாவிடினும் நமது ஆலயங்களை மாசு படுத்தாது இருக்கலாமே.

சன்னதி திறந்தாயிற்று,

மின்சார ஒளி வரும் முன்னே ஜகஜோதியாய் ஆவுடையார், 

மணிவசாகரின் திருவாசகத் தேன் மனதுள் ரீங்காதிக்கின்றது:
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்று இன்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் ....

ஆங்காங்கே அன்பர்கள் முற்றோதல் செய்த வண்ணம் இருக்கிறார்கள்.  

மணிவசாகருக்கு இரண்டு பிரத்யேக சன்னதிகள். ஸ்தல வ்ருக்ஷம் குருந்த மரத்தடியில் எம்பெருமான் மணிவாசகருக்கு உபதேசிக்கின்ற காட்சி.

ஆலயம் தொழுது விடை பெறும்பொழுது ஒரு பேருந்து நிறைய சிவனடியார்கள் ஆலயம் தொழுவதற்கு வந்து இறங்கிக் கொண்டிருந்தார்கள்.

ரமண மஹரிஷி திருவாசக உணர்வுகள்:

முருகனார் தம்முடைய மூன்று பதமாலைப் பாசுரங்களில் பகவானின் கருத்தைப் பதிவு செய்துள்ளார் . அதிலிருந்து ஒன்று:


திருவாசகம் என்பது தெய்வீகத் தேன் கடலாகும், இது கருவறையில் அகப்படும் பிறவித் துன்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் கடவுள் அனுபவத்தை வெளிப்படுத்துகிறது. ( படமலை , பக். 355.)

நிறைவாக, 

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே.

No comments:

Post a Comment