Tuesday, December 30, 2025

காற்றும் ... கடவுளும் காணாப் பொருளா...

இறைவன்
இடைவிடாத விவாதப் பொருள்.
எங்கே இருந்தால் காட்டு 
என்கிறார் திருவாளர் நாத்திகர்.
இறை அன்றி
யாதும் இல என்கிறார்
ஆஸ்திகர்.
காற்று கண்ணில் தெரிவதில்லை.
காற்றே இல்லையா?
உணர்பவர் உணரட்டும்.
உணராதவர்க்கும் உணர்வதின்றி
வேறு வழியில்லை
எனும் உணரும் நிலை 
சித்திக்கும்.
கடவுளோ, இறைவனோ
நாம் விளிக்கும் பதங்களே.
நாம் காணாது உணர்ந்த
காற்றை காற்று 
என விளிப்பது.
பரம்பொருள், பிரம்மம் -
ஏனைய பெயர்கள்
யாவுமாய், யாவையுமாய் 
வியாபித்த மஹா 
பிரம்மாண்டம் -
Super Radar
We can't be away.
तत् त्वम् असि 
Ta tvam asi.
நீயே அது.
 “Thou Art That”.

No comments:

Post a Comment