தியானம்,
நிதானம்
என்று சொல்லிக் கொண்டிருந்தாலும்,
பதற்றம் என்னவோ
நம்மிடம் பெரும்பாலும்
போராடி
நான் பெரியவனா,
அல்லது
நீ பெரியவனா
என்று வினவுவது
ஏனோ யதார்த்தம்.
சரி,
பதற்றம் இருந்து
விட்டுப் போகட்டும் என
தாராளமாய் இருந்து விடலாமா?
Stress is the killer.
The medicine is no medicine.
' No medicine ' means?
பதற்றமாய் இருக்கிற பொழுது
ஒரு முறை சொல்லிப் பாருங்கள்,
Relax..
மனம் ஆசுவாசப் ஓடுவதை
நீங்களே கவனிப்பீர்கள்.
கண்கள் மூடி,
மனது அமைதியாய்,
யாதொன்றும் நினையாமல்
சில மணித் துளிகள்
இயலுமென்றால்,
அதுவே
தன் வயம் - self,
த்யானம்.
Every day brings a choice: to practice stress or to practice peace. - Joan Borysenko