Saturday, December 6, 2025

காளிசா ....Kaleeswara

இந்தக் கோவிலில் வைகாசி உற்சவத்தின் போது ஆரூரில் பக்தர்கள் பரவசமாக தியாகேசா என்று உற்சாகம் ஆக அழைப்பது போல், காளையார்கோவிலில் காளிசா காளிசா என்று அழைப்பர்.

பிரதான ஈஸ்வரரின் திருநாமம் ஸ்வர்ண காளீஸ்வரர். தாயாரின் திருநாமம் ஸ்வர்ண வல்லி. சிவகங்கை சமஸ்தானத்தின் ஆலோசனை உடன் எங்கள் பாட்டி - அப்பத்தா, அப்பாவின் அம்மா வழி மூதாதையர்கள் ஈஸ்வரன் சன்னதியையும், அப்பா வழி முப்பட்டனர்கள் அம்மன் சன்னதியையும் திருப்பணிக்கு ஈஸ்வர அனுகிரகம் பெற்றனர்.

இதன் காரணமாக எங்கள் இல்லத்தில் பிறக்கும் பெண் குழந்தைகள் பலருக்கு ஸ்வர்ண வல்லி என்று பெயரிடுவது வழக்கம். சமீபத்தில் காலமான என் அத்தைக்கு, 94 வயது ஸ்வர்ண வல்லி என்று பெயர்.

Picture courtesy: சகோதரி சிவகாமி RMSP V


அத்தைக்குப் பின் ஒரு மாத காலத்தில் ஈஸ்வரன் பொற்பதங்களை அடைந்த மாமா, 96 வைகாசி உற்சவ 10 நாட்களும் காளையார்கோவிலிலேயே இருப்பார்.

வீரமங்கை வேலு நாச்சியாருக்கு உதவ வந்த மருது சகோதரர்கள் சரணடையவிட்டால், காளையார்கோவில் இரட்டைக் கோபுரங்களைத் தகர்த்துவிடுவோம் என்று ஆங்கிலேய அரசு கெடு விதித்தால், கோவிலைக் காக்க தன்னுயிர் ஈந்த மாமன்னர்கள் மருது சகோதரர்கள். அன்னார் தூக்கில் இடப்பட்ட நினைவிடம் திருப்பத்தூரில் அமைந்திருக்கிறது.