Tuesday, March 23, 2021

எல்லை வீரர்கள்

எல்லை வீரர்கள்

எல்லை வீரர்கள்

2021 ல் நான் படித்த மூன்றாவது புத்தகம் இறையன்பு IAS அவர்களின், 'எல்லை வீரர்கள்'.

புத்தகத்தின் விலை ரூபாய் 20 தான். 

பக்கங்கள் 32.

அலுவலக அறையில் குளிர் சாதனம் தற்காலிகமாக சற்றே சிறிது க்ஷணம் சரியாக இயங்கவில்லை என விசனப்படுவோமே. 

இறையன்பு அவர்கள் எல்லை வீரர்களின் பணிச்சூழலை நம் முன்னே காட்சியில் விவரிக்கிறார். 

சியாச்சின். 

பனிபடர்ந்த இமய மலை உச்சி. 

சமதளத்திலிருந்து ஏறத்தாழ 19000 அடிகளுக்கு மேலே. 

Oxygen supply  குறைவு. 

 - 50 degrees. 

Ice scooter பயன்படுத்த இயலாது.  பயன் படுத்தினால் ஏற்படும் சப்தத்தில் எதிரிகள் விழித்தெழக்கூடும்.  குண்டு மாரி பொழியலாம். 

நாட்டு மக்கள் எல்லோரும் நல்ல பாதுகாப்புடனும்,  நலமாகவும் இருக்கும் பொருட்டு, தன் நலன் கருதாது,  குடும்பம் தவிர்த்து,  மறு க்ஷணம் உத்தரவாதமானது தானா என்கிற உறுதியற்ற நிலையில் பணியாற்றுகிறார்கள் நாட்டின் எல்லையில் நம் வீரர்கள். 

சில வருடங்களுக்கு முன் நண்பர் ஒருவர் தன் மனைவி மற்றும் மகனுடன் லடாக் சுற்றுலா சென்று வந்ததை, லடாக்கின் லயமான சூழலை விவரித்தார். 

நண்பர் போன சமயம் கோடையின் இறுதி,  மற்றும் குளிர் காலத் துவக்கத்தில்.  உள்ளூர், சுற்றுப் புற பகுதிகளை சுற்றிக் காட்ட நண்பர் தங்கியிருந்த விடுதி ஓர் உள்ளூர் வாடகைக் கார் ஓட்டுனரை ஏற்பாடு செய்து இருந்தது. 

சுற்றுலா தருணத்தில்,  கோடையில் தங்கும் விடுதிகளில் பணிபுரிபவர்கள்,  வாகன ஓட்டுனர்கள் போன்றோர்க்கு வேலை வாய்ப்பு இருக்கும்.  பிற காலங்கள் எல்லாம் பனி சூழ்ந்து பணியாற்ற ஏதுவாக இல்லாத நிலை.   

புலம் பெயர்ந்து வேலை செய்பவர்கள், குறிப்பாக நேப்பாளிகள் பனிகாலத் துவக்கத்தில் லடாக்கிலிருந்து கோவா போன்ற பிற சுற்றுலா மையங்களை நோக்கி சென்று விடுவார்கள்.  உள்ளூர்ப் பணியாளர்கள் பெரும்பாலும் லடாக்கிலேயே தங்கி விடுவார்கள். 

ஆயினும் உள்ளூர் பணியாளர்களுக்கு இராணுவத்துக்கு உதவியாளர்களாக பணியாற்ற வாய்ப்பு உண்டு.   உடல், மனோ திடம் உள்ளவர்கள், தகுதி பெற்றிருந்தால்.  இவர்களின் பணி ஹெலிகாப்டரிலிருந்து பனி படர்ந்த மலை உச்சிகளில் போடப்படும் இராணுவ வீரர்களுக்கு வேண்டிய உணவு மற்றும் இதர அத்யாவசிய பொருட்களை சேகரித்து முகாம்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் .


இந்தப் பணிகளுக்கு ஏன் கழுதைகள், குதிரைகள் பயன்படுத்தப்படுவதில்லை என்ற நண்பரின் வினாவிற்கு ஓட்டுநர் அளித்த பதில்:

மைனஸ் 50 டிகிரி சீதோஷ்ன நிலையில் கழுதைகள், குதிரைகளால தாக்குப்பிடிக்க இயலாது.

"சரி, ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் பணியாற்றுவார்கள்?" நண்பரின் கேள்வி.

ஓட்டுநர்: "இரண்டே மணி நேரங்கள் தான்.  ஆக்சிஜன் குறைவால் அவ்வளவு நேரமே மூச்சுப்பிடித்து வேலை செய்ய இயலும். மீதி நேரங்களெல்லாம் ஆசுவாசப்படுத்திக்கொள்ளவே சரியாக இருக்கும். இப்பணியையும் அதிகாலை இரண்டு மணிக்கே துவங்க வேண்டும். டார்ச் விளக்குகள் உபயோகிக்காமலேயே.  டார்ச் உபயோகித்தால் எதிரிக்குத்தெரிந்து குண்டு பொழியத்துவங்கிவிடுவார்கள்.இந்தப் பணியை அதிகாலை இரண்டு மணி இருளில் செய்கிறபோது அதீத கவனத்துடன் செய்யவேண்டும். சற்றே கவனம் பிசகினாலும், கீழே விழுந்தால் அதல பாதாளம் தான். எலும்பு கூட கிடைக்காது. "


இப்படியெல்லாம் நம்மையெல்லாம் காக்க குடும்பம், மனைவி, மக்கள் எல்லாம் துறந்து நமக்காக அல்லும் பகலும் பணியாற்றுகின்ற நமது இராணுவ சகோதரர்களுக்கு யாது கைமாறு செய்யப்போகிறோம்.

கொடி தினத்தன்று வெறும் ஸம்ப்ரதாயமாக இன்றி மனப்பூர்வமாக, மனதார நம்மால் இயன்ற வகையில் நன்றியுடன் நமது பங்கை அளிப்போம்.

Salutes to our Jawans.


No comments:

Post a Comment