Thursday, August 28, 2025

நான் நீ எனது உனது அது இது...... யார், எது?


நான்
நீ
எனது
உனது
அது
இது
இத்தனை பரிமாணங்களா?!
ஆழ்ந்து உறங்குகிறோம்.
யாதொரு பிரக்ஞையும் இல்லை.
அப்படியானால்
நாம் இல்லையா?
நாமா?
நாம் இருந்தோம்தானே?
நாமென்றால்
உடலா,
மனமா,
புத்தியா ?
எது இருந்தது.
யாவும் கடந்த உயிர் --
Transcendental,
The spirit -
நிலைதானே.
அந்த உயர், உயிர்
நிலையை
ஆராதிப்போமா.

உறக்கத்திலிருந்து
விழிப்பு.
சுகாசனத்தில் -
சிரமமின்றி அமர்கிற நிலை -
கண்கள் மூடித்
தியான நிலைக்கு.
கண்கள் அயர்ந்த நிலையிலும்
மனது
கடல் அலை கரைகளைத்
தொடுவது போல
அலை பாய்ந்து கொண்டே
இருக்கும்.
தடுக்க வேண்டாம்.
தானே ஓய்ந்து ஓய்ந்து
உயிர் நிலையில் -
ஒன்றான நிலையில் -
பேதங்களற்ற
பரமானந்த -
Blissful Awareness state-
நிலையிலே ஆழ்ந்திருக்கும்.
Om! purnamadah purnamidam,

purnāt purnam-udacyate.
purnasya purnamādāya,
purnam-eva-avashishyate.
Om! Shantih! Shantih! Shantih!

No comments:

Post a Comment