Tuesday, November 19, 2024

The Dialogue -கிடைக்கிறது கிடைக்காம இருக்காது, கிடைக்காம இருக்கிறது கிடைக்காது.


கிடைக்கிறது கிடைக்காம இருக்காது, கிடைக்காம இருக்கிறது கிடைக்காது. -

இது Super Star ன் famous dialogue.  முத்து திரைப் படத்தில்.

மஹான்களின் உபதேசங்களை திரை வழியில் எல்லோரையும் சென்றடையும் வாய்ப்புக்களை Super Star பயன்படுத்தத் தவறுவதில்லை.

சரி
இந்த வசனத்தின் மூலகர்த்தா யார்?

'நான் யார்?' என்ற ஆன்ம விசாரத்தை உபாயமாக உலகுக்கு வழங்கிய சாக்ஷாத் பகவான் ரமண மகரிஷிகள் தான்.

பகவானின் மொழிகளில் அந்த வசனம், வாசகம்:

' அவரவர் பிராரப்த பிரகாரம் அதற்கானவன் ஆங்காங்கு
இருந்து ஆட்டுவிப்பன் என்றும் நடவாது என் முயற்சிக்கினும் நடவாது
நடப்பது என் தடை செய்யினும் நில்லாது இதுவே திண்ணம்
ஆகலின் மௌனமாய் இருக்கை நன்று'.

கர்ம வினைப் பயனை எடுத்துரைப்பது போல் தோன்றினாலும், பகவான் இதனைப் பகர்ந்தது தன்னை ஈன்ற தாயிடத்தில்.  

எங்கு செல்கிறோம் என யாரிடமும் சொல்லாமல் திருவண்ணாமலை பகவான்  வந்த விவரமரிந்து தாயும், தனயனும் திருவண்ணாமலையில் பகவானை சந்தித்து ஊர் திரும்புமாறு மன்றாடிய பொழுது பகவான் பகர்ந்தது தான் மேற்சொன்ன வசனம்.

Did He ever mean not to make any efforts?
தாயும், தனையனும் மன்றடியிரா விட்டால், இந்தப் பொருள் பொதிந்த உபதேசம் கிடைத்திருக்குமா?

பகவானின் மொழியிலேயே, 
'...அதற்கானவன் ஆங்காங்கு
இருந்து ஆட்டுவிப்பன்.'

நம் மொழியில்
எல்லாம் அவன் செயல்.
The Ordainer controls the fate of souls in accordance with their past deeds. Whatever is destined not to happen will not happen, try how hard you may. Whatever is destined to happen will happen, do what you may to stop it. This is certain. The best course, therefore, is to remain silent.
Sri Ramana Maharishi


No comments:

Post a Comment