Sunday, December 20, 2020

The purpose.... of language

தமிழிலே 
அப்பர்,  சுந்தரரை விடத்
தேர்ந்து விட்டவர்கள் போன்றும்,
தாங்களே தமிழ் வளர்ச்சிக்காக -
யாதொன்றும் செய்யாமலேயே -
அவதரித்தவர்கள் போலவும்
பிற பாஷைகளிடம் துவேஷம்
ஏற்படுத்தி வளரும் பருவத்தினரின்
வாய்ப்புகளைப் பாழ்படுத்தி வரும்
சுய நல அரசியல் வாதிகளை
இளம் பருவத்தினர் தெரிந்து அறிந்து,
தங்களின் வாழ்க்கையை வளம் பெறச் செய்தல் நலம். 

அவர்களுக்காக,  பாஷைகள் குறித்து மஹாபெரியவர் :


"எல்லா பாஷையும் எல்லாருக்கும் பொதுதான் என்ற மனப்பான்மை வரவேண்டும். 

பரஸ்பரம் அபிப்ராய பரிவர்த்தனைக்காக ஏற்பட்டதே பாஷை என்ற அடிப்படையான உண்மையை மறந்து விட்டதால்தான்,  இப்போது தாய் பாஷை ஒன்றிடமே வெறிமாதிரியான பற்றுதல்,  பிற பாஷைகளிடம் துவேஷம் எல்லாம் ஏற்பட்டிருக்கின்றன. 

மற்ற எல்லா விஷயங்களிலும் பரந்த மனப்பான்மை,  இன்டர்நேஷனல் அவுட்லுக் (ஸர்வ தேச நோக்கு) என்று சொல்லிவிட்டு இந்த பாஷை விஷயத்தில் மட்டும் இத்தனை குறுகின புத்தி வந்து விட்டதைப் பார்க்கிற போது பரிதாபமாக இருக்கிறது. "





No comments:

Post a Comment