Manifest என்று ஒரு வார்த்தை. உணர்ந்ததை நிகழ்த்துவது என்பது போன்று பொருள்பட. பகவான் சொல்வதென்ன? இயல்பிலேயே மனிதப் பிறவி மாசற்றது. நல்லன அல்லாததும், பலவீனமானதும் எவை எனில் மனிதனின் பழக்க வழக்கங்களும், மனதில் தோன்றும் எண்ணங்களும், ஆசைகளும் தான்.
இதில் பகவான் உணர்த்துவது என்ன?
தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ பலவீனங்களுக்கு உட்பட்டுவிட்டால், தீர்வே கிடையாதா?
உண்டு என்பது தான் பகவான் உணர்த்துவது. இந்த உலக இயக்கங்கள் எல்லாம் மகத்தான சக்தியின்பால் நடக்கிறது தான். ஒரு வினோதம் என்னவென்றால் கடவுள் எல்லாம் தானே செய்வதென்றும், மனிதன் ஒன்றுமே செய்யாமல் தான்தோன்றியாக இருக்கட்டும் என்று விட்டு விடவில்லை. மனிதனுக்குள் சிறிது அறிவு படைத்து, மனிதன் மேன்மையுறட்டும் என்றும் கருதி பல செயல்களை மனிதனிடத்தே இறைவன் விட்டு வைத்திருக்கிறான்.
பகவான் மட்டுமா
நம்மை நாமே சீர் செய்து கொள்ள இயலும் என்கிறார்? சான்றோர் பலரும்
அதே கருத்தை வெவ்வேறு விதமாக வலியுறுத்தி இருக்கிறார்கள்.
“தீதும் நன்றும் பிறர்
தர
வாரா”
-
கணியன் பூங்குன்றனார்
"Stand up, be bold, be strong ! Know that you are the creator
of your own destiny. All the strength and succour you want is within
yourself."
-
Swami Vivekanandar
You are what your deep, driving desire is. As is you desire, so is
your deed. As your deed is, so is your destiny."
Brihadaranyaka Upanishad
“Quantum physics, the most tested, verified and truthful of all the
sciences, emphasizes that consciousness creates our life experiences.
Consequently, by reprogramming consciousness, we are empowered to take control
of our creation and manifest a life we might characterize as ‘Heaven-on-Earth’
” – Dr. Bruce Lipton
