Sunday, September 8, 2024

தெரியாதது எல்லாம் தெரியாததா?! -

அமைதியாய்
' த்யான்'
என்பர்.
இறை நாமம்
சொல் என்பர்.
மார்க்கங்கள் பல.
யாவிலும் பலன்
உண்டு.
பிரத்யக்ஷ்மாய்த் 
தெரிந்தால் 
தான் உண்மையா?
கேட்பவருக்கு 
ஒரு கேள்வி,
காற்றைப் பார்த்திருக்கிறீர்களா?
இல்லை தானே 
உமது பதில்.
இல்லை என்றால்
காற்று பொய்யா?
இவ்வினாவிற்கும் 
இல்லை என்பதே
பதிலானால்,
அன்பரே,
உணருங்கள்.
உணர்தல் தானே
உன்னதம்.
உன்னால் உணர
இயலும் என்று 
உணர்த்தவல்ல
எவரும்
தவ யோகியே.

ஸத் ஸங்கத்வே நிஸ்ஸங்கத்வம்
நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிஸ்சல தத்வம்
நிஸ்சல தத்வே ஜீவன் முக்தி:

From Satsangh comes non-attachment, 
from non-attachment comes freedom from delusion, which leads to self-settledness.
From self-settledness comes Jeevan Mukti.