விழிப்புத் தட்டிற்று.
கைபேசியைத் துழாவி மணியைப் பார்த்தால்
அதிகாலை 3.39.
உடல் உழைப்பு அதிகம் இல்லாத நிலையிலும், அதிகாலை வேலையில் அபார உடல் அயர்வு.
Bath room போய்விட்டு,
மீண்டும் சற்று அயர வேண்டும் போல் இருந்தது.
YouTube ல் லலிதா ஸஹஸ்ரநாமம்
மெல்லியதாக ஒலிக்க வைத்துவிட்டு
கண்ணயர்ந்தேன்.
முழுக்க முழுக்க
ஸமஸ்க்ருதம்.
அந்த மஹா ஸமுத்ரத்தில் - ஸமஸ்க்ருதத்தில் -
ஒரு துளியின் சிறு துளியளவாவது
பரீகக்ஷ்யம் இல்லை.
இல்லையென்றாலும் இது குறை ஒன்றும் இல்லை.
Eventually you will get to know the meaning as you keep listening to it. And
நீங்கள் சொல்வீர்கள்,
சொல்லிய பொருளுணர்ந்து.
ஸஹஸ்ரநாமம் ஒலித்துக் கோண்டிருக்கிறது. நன்கு அயர்கிறேன்.
அயர்ந்த நிலையிலும்
அக்ஷ்ரங்கள் தேன் போல்
ஆராட்டிக் கொண்டிருக்கின்றன.
கிட்டத்தட்ட 50 நிமிடங்கள்.
உடல் உயர்வு முழுமையாக நீங்கி
புத்துணர்வோடு எழுகிறேன்.
There is a new discovery.
That திருவள்ளுவர் got baptized - ஞானஸ்ணானம் - by St. Thomas.
Endorsing this theory : மெத்தப் படித்த மேதாவிகள்.
போகட்டும் விடுங்கள்.
இரண்டு மூன்று வருடங்கள் முன்பு
பணி நிமித்தம் கும்பகோணம் பகுதிக்கு சென்று வந்ததும், cab driver உடன் உரையாடியதை blog ல் எழுதியிருந்ததும் நினை விற்கு வந்தது.
Cab Driver's name: தாஸ்
அநேகமாக converted ஆக இருக்க வேண்டும்.
அவர் விவரித்த லலிதாம்பிகைத் தாயார், திருமீயச்சூர் ஆலய சம்பவமே blog ல் எழுதியிருப்பது.
வாழ்க வளமுடன்.