तेजस्विनावधीतमस्तु
Meaning 'let our study be enlightening '
லோக க்ஷேமத்திற்காக வேத அத்யயனம் இடையறாது ஸதா ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது மஹா பெரியவரின் விருப்பம்.
வேத பாடசாலைகள் நிர்மாணம் செய்து பரிபாலனம் காலம் காலமாக செய்து வந்ததில் நகரத்தார் ஆற்றிய பெரும் பணியை மஹா பெரியவர் நினைவு கூறாதிருந்தில்லை.
அண்மையில் அதிகாலையில் நம் தேவகோட்டை திருப்பத்தூர் சாலையில் St Mary's வரை நடைப் பயிற்சி செய்து திரும்பியதைப் பற்றி எழுதியிருந்தேன்.
நான் பதிவிட மறந்த மூன்று நிகழ்வுகள் :
1 மிகச் சரியாக 5 மணிக்கு ஒலித்த 'அல்லாஹு அக்பர்' பிரார்த்தனை
2 சற்று தூரத்தில் இடது புறம் இருந்த, கிஷ்கிந்தா பேக்கரி எதிரில், spic and span ஆக இருந்த church ல் அதிகாலைப் பிரார்த்தனை.
3 மனம் மேற்படியார்களின் கர்ம ஸ்ரத்தையை உணர்ந்த வேலையிலையே, சற்றே கணமாக இருந்தது. ஏன் நாம், ஹிந்துக்கள் மாத்திரம் அதே அதி ஸ்ரத்தையாய் இல்லை என்று. சிறிது தூரம் தான்.
சற்றே ஆற்றுப் படுத்திய காட்சி.
லக்ஷ்மி திரையரங்கிற்கு சற்று முன் அழகாய், மிகச்சிறிதாக ஆனால் நேர்த்தியாக மஹாகணபதி ஆலயம். பிரார்த்தனைப் பாடல் ஒலித்துக் கொண்டிருந்து. இந்த அளவில் சிறிய கோவிலை அமைத்து நித்ய பரிபாலனம் செய்பவர்கள் பெருந் தனக்காரர்களாக இல்லாதிருக்கலாம். ஆனாலும் பெரும் மனதுடையவர்கள். அன்றாடம் சிறிய அளவிலே வருமானம் ஈட்டும் கைவண்டித் தொழிலாளிகள்.
மீண்டும் வேதத்திற்கு வருவோம்.
பாடசாலைகள் இருந்ததாக நினைவுண்டு.
இருந்த இடங்கள் இல்லாதிருப்பது மிகுந்த வேதனை அளிப்பது.
சரி கவலைப் பட்டுக் கொண்டே இருக்கலாகுமா?
நல்ல உள்ளங்கள் இதற்கான முயற்சிகள் செய்யலாம்.
'ஆவஹந்தி ஹோமம்' செய்து குற்றுயிரும் குலையுயிருமாய் இருந்த நிலையிலிருந்து வேத பாடசாலைகள் புத்துயிர் பெற்று மீண்டும் வித்யார்த்திகளுடன் சிறப்பாக நடைபெறுவதைக் கண்டிருக்கிறோம் என மஹா பெரியவர் குறிப்பிட்டிருக்கிறார்.
வேத மந்திரங்கள் ஓங்கி ஒலிக்க வேண்டும்.
உலகமெல்லாம் நலம் யாவும் பெற வேண்டும்.