சிறுவனாய் இருந்த போது எங்கள் ஐயா - தாத்தா - எழுத்தாணி - sharp writing tool - கொண்டு பனை ஓலையில் இசைகுடிமானம் எழுதுவதைப் பார்த்திருக்கிறேன். இசைகுடிமானம் என்பது நகரத்தார் இல்லங்களில் திருமண நாளன்று திருப்பூட்டியதும் இரு வீட்டுப் பெரியவர்களும் பதிவு செய்து கொள்ளும் மணப் பத்திரம். இன்று இது போன்று ஏடுகளில் எழுதாமல் அச்சடித்த சிறிய பதிவேட்டில் எழுதிக் கொள்கிறார்கள். திருப்பூட்டுவது என்பது உற்றார், உறவினர் ஆசியுடன் மணமகன் மணமகளுக்கு மங்கள நாண், திருமாங்கல்யம் அணிவித்து திருமண நிகழ்வை தெரிவிப்பது. என்னதான் நவீனம் என்றாலும், பழமையை சில தருணங்களிலாவது தவிர்ப்பது கஷ்டமாக இருக்கிறது, குறிப்பாக, இசைகுடிமானம் எழுதும்போது. At least we can use these parallelly. இவ்வாறு செய்கிற போது எழுத்தாணி போன்ற பொருட்கள் just museum piece ஆக மட்டுமே ஆகாது. எழுதுகிற வழக்கம் காலப் போக்கில் கரைந்து விடாது தொடரும்.
சைவ சமயத்தை வாழ்வியலாகக் கொண்ட நகரத்தார் இல்லங்களில் எல்லாம் தேவாரம், திருவாசகம், திருமுறைகள் தாங்கிய ஓலைச் சுவடிகள் இரண்டு மூன்று தலைமுறைகள் முன்பு நம் பாட்டையாக்கள் அதீத கவனம் மேற்கொண்டு பாதுகாத்து வந்தனர். இன்றைய நிலை தெரியவில்லை.
தமிழ்க் காவலர்கள் என்று பறை சாற்றிக்கொண்டு தாளில் இருக்கும் தமிழையே பிழை இன்றிப் பேசத் திணறும் இவர்கள் தமிழைக் காத்தால், தலை வணங்குவோம்.
எஞ்சி, மிஞ்சிய ஓலைச் சுவடிகளை மிகுந்த சிரமங்களுக்கு இடையே படாத பாடு பட்டு மீட்டு எடுத்து இன்றைய தலைமுறை தெரிந்து கொள்ளச் செய்த
தமிழ்த் தாத்தா உ வே சா அவர்களை நன்றியுடன் நாளும் வணங்கி நினைவில் போற்றுவோம்.